சென்னை அரசு மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி பணியில் இருந்த டாக்டர் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலி யுறுத்தி, முதுநிலை மருத்துவ மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் நடத்தி வந்த வேலை நிறுத்தம் அமைச்சரின் பேச்சு வார்த்தைக்குப்பின் கைவிடப்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக் கை எடுக்கவும், அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தவும், அமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக சிகிச்சையை முறையாக பெற முடி யாமல் அவதிப்பட்டு வந்த நோயாளிகள் சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.பொதுவாக, அரசு மருத்துவமனைகளில் மிக திறமையான மருத்துவர்களும், இதர மருத்துவம் சார்ந்த ஊழியர்களும் இருந்த போதிலும் போது மான கட்டமைப்பு வசதிகளும் உபகரணங் களும், மருந்தும் இல்லாததால் நோயாளிகளுக்கு மன திருப்தி தரும் வகையில் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறுகிறார்கள்.
தனி யார் மருத்துவமனைகளில் காசு பிடுங்கினாலும், ஒரு தொடர்ச்சியான கவனிப்பு இருக்கிறது என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையிலும், அதை மக்கள் எதிர்பார்க் கிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பிலோ, அதன் தேவைகளை நிறைவு செய்வதிலோ அரசு உரிய அக்கறை செலுத்தாத தால் மக்களின் எதிர்பார்ப்பை அரசு மருத்துவ மனையால் பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது. ஒருவகையில் மருத்துவம் வியாபாரமாக்கப் பட்டுள்ள சூழலில் அரசு மருத்துவமனைக்கு வருகிறவர்களை தனியாரை நோக்கி விரட்டுகிற செயல்பாடுகள் அரசின் மெத்தனத்தால் நடந் தேறிக்கொண்டிருக்கிறது.தனியார் மருத்துவமனையிலும், சில நேரங் களில் போதிய அனுபவம் இல்லாத மருத்துவர் கள் சிகிச்சை அளித்து சில உயிர் இழப்பு ஏற் படும் போது, அங்கேயும் உடனடி மோதல் ஏற் படுகிறது. பெரிய தனியார் மருத்துவமனைகளில் முக்கியமான சிகிச்சைகளை அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றுகிற மிகச் சிறந்த அனு பவம் மிக்க மருத்துவர்களை வரவழைத்தே செய் கிறார்கள். ஆக, திறமையான மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ள போதிலும், போதிய கவனிப்பு இல்லை என்கிற குறை களை யப்பட வேண்டும்.
இல்லையேல் இந்த மோதல் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்யும்.மருத்துவமனைகளுக்கு எதிராக அவ்வப் போது ஏற்படுகிற திடீர் வெடிப்புகள் தீர்வாகாது. அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் அளிப்பது அரசின் கடமை. மருத்துவத்தை தனி யாரிடம் தாரை வார்ப்பது பெரும் கொடுமை என் பதை மக்கள் உணர்ந்து அதற்கு எதிராக கிளர்ந் தெழ வேண்டும். மாறாக, நிழல் சண்டை நடத் திப் பயனில்லை.அது போல, மருத்துவர்கள் தங்கள் மீது தாக்குதல் வரும் போது திடீர் போராட்டங்கள் நடத்துவது, முறையானது அல்ல. தங்கள் சங்கங்கள் மூலம், முறையான கோரிக்கைகளை உருவாக்கி அரசை அணுகி தீர்வுகாண பலகட் டங்களில், பல வடிவங்களில் போராடலாம். மருத்துவ மனைக்குள் சிகிச்சையை நிறுத்து கின்ற அளவிற்கு நடத்துகின்ற போராட்டம் என்பது கடைசி ஆயுதமாகத்தான் இருக்க வேண்டும். முதல் ஆயுதமாக இருக்கக்கூடாது.

Leave A Reply