வெள்ளி நகர்வுஅதிசய நிகழ்ச்சி
முசிறி, ஜூன் 6-தினந்தோறும் வானில் நடைபெறும் ஏராளமான அதிசயங்களில் ஒன்றான ஒரு நூற்றாண்டுகளுக்கு இருமுறை மட்டுமே நிக ழக்கூடிய ஓர் அரிய வான் நிகழ்வான வெள்ளிகோல் சூரியனை கடக்கக் கூடிய ‘வெள்ளி நகர்வு’ எனப் படும் அதிசய நிகழ்வு ஏற் பட்டது.இந்த அதிசயத்தை ஜூன் 6 புதன் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு துவங்கி காலை 10.20 மணி வரை காண முடிந்தது. இதனை காண்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக் கம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற் றும் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிகளில் அறி வியல் முறையில் தயாரிக் கப்பட்ட சூரிய வடிகட்டி கண்ணாடி மூலமாகவும், வெல்டர்கள் பயன்படுத் தக் கூடிய கண்ணாடி எண் 14 மூலமாகவும் காண்ப தற்கு ஏற்பாடு செய்யப் பட்டது.இதில் 1200க்கும்மேற் பட்ட மாணவ – மாணவி கள் மற்றும் பள்ளி ஆசிரி யர்களும் பார்த்து மகிழ்ந் தனர்.இதில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.பி.செல்லம், எஸ்.இளங்கோவன், எஸ். ரமேஷ் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கே.கோகிலா வாணி, எஸ்.கலையரசி மற்றும் இதர ஆசிரியர் களும் பங்கேற்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சார்ந்த டி. ராஜா, ஸ்ரீமதி, எழிலரசி, எம்.தர்ஷினி, டி.முருகே சன், சுந்தர் ஆகியோர் இதனை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

ஆட்சியரகத்தில் விஷம் குடித்த வாலிபர்
விருதுநகர், ஜூன் 6-விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஒன்றி யத்திற்கு உட்பட்டது கீழ ராஜகுலராமன் புதூர். இவ்வூரைச் சேர்ந்தவர் முருகன்(40).இவர் கோயம்புத்தூரில் வேலை செய்து வந்தார். இந்நிலை யில் இவரது தம்பி மற்றும் தங்கை, முருகனிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்களாம். பின்பு இவர் கோவைக்கு சென்ற தும் அந்த இடத்தை அவர் களது பெயரில் பத்திர பதிவு செய்து விட்டன ராம். மீண்டும் சொந்த ஊருக்கு வந்து பார்த்த போது இவரது பெயரில் இடம் இல்லையென்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம டைந்த முருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு வந்தார். அங்கு மனுக் கள் ஏதும் தரவில்லை. திடீ ரென ஆட்சியர் அலுவல கத்தின் எதிரே இருந்த உண வகத்தின் அருகே விஷம் அருந்தினார். இதனால் அவர் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந் தார். இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உட னடியாக முருகனை மீட்டு அரசு மருத்துவமனை யில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

Leave A Reply