திருவாரூர், ஜூன் 6-திருவாரூர் மாவட்டத் தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அர சால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்துவர், புத்த மதத்தினர், சீக்கியர் மற் றும் பார்சி வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ – மாணவியர் களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட் டத்தின் கீழ் 2012-13ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டதின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ- மாணவியர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட் சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாண வியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 விழுக் காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றி ருத்தல் வேண்டும். பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் 2012-13ஆம் ஆண்டில் கல்வி உத வித் தொகை பெற்றிருக்கக் கூடாது. குடும்பத்தில் அதிக பட்சம் இருவருக்கு மட் டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும் பத்திலுள்ள மாணவ, மாண வியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவ, மாணவியர்கள் புதியது மற் றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப் பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப் பிக்க வேண்டிய கடைசி நாள் 15.8.2012. கல்வி நிலை யங்கள் மாணவ-மாணவியர் களிடமிருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப் பங்களை சரிபார்த்து அதற் கான கேட்புப் பட்டியலை உரிய படிவத்தில் பதிந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலு வலரிடம் 25.08.2012க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.சிறுபான்மையின மாணவ – மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித் தொகை பெற உரிய காலத்தில் விண்ணப் பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சி.நட ராசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: