திருச்சிராப்பள்ளி, ஜூன் 6-மணப்பாறையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கட்டிட நிதியளிப்பு பொதுக்கூட்டம் செவ்வா யன்று மாலை பெரியார் சிலை அருகில் நடைபெற் றது.கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத் தில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்டச் செய லாளர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், வி.சிதம்பரம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வட் டக் குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், அழகர்சாமி, திருநாவுக்கரசு, கண்ணன், வெள்ளைச்சாமி, சீனிவா சன், தியாகராஜன், கருப் பையா, துளசிவேல், அப் துல் மாலிக், சரஸ்வதி ராஜா மணி உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.முன்னதாக புதுக்கோட்டை விழுதுகள் கலைக்குழுவி னரின் கலைநிகழ்ச்சி நடை பெற்றது.

Leave A Reply

%d bloggers like this: