திருவாரூர், ஜூன் 6-அரசவனங்காடு கடைவீதியில் செயல்பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் சமீபத்தில் விஷமிகள் சிலரால் தீ வைத்துக்கொளுத்தப்பட்டது. இது குறித்து குடவாசல் காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டு, தீ வைத்த குற்றவாளிகளை உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த வன்முறை செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் அரசவனங்காட்டில் ஒன்றியச் செயலாளர் எம்.சேகர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கலைமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மணியன், ஆர்.மருதையன், எஸ்.தம்புசாமி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் எம்.தருமையன், கிளைச் செயலாளர்கள் லோகநாதன் (அரசவனங்காடு), கலைமணி (மணக்கால்), கல்யாணசுந்தரம் (செம்மங்குடி) உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: