சென்னை, ஜூன் 6 -சாலை விபத்தில் பலி யான தொழிலாளர் குடும் பங்களுக்கு தலா ரூ.25 லட் சம் நஷ்ட ஈடு வழங்க தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐ டியு வலியுறுத்தியுள்ளது.சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:ஸ்ரீபெரும்புதூர் பகுதி யில் உள்ள ஹாவாசின் ஆட் டோ மோடிவ் பிரைவேட் லிட் என்கிற பன்னாட்டு நிறுவனத்தில் பிஎப்எஸ் என்ற ஒப்பந்தத்தாரரிடம் பணியாற்றும் வட மாநிலங் களைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பிள்ளைச் சத்திரம் என்ற பகுதியில் வசித்துவந்தனர்.கடந்த 4ம் தேதி இரவு 11 மணி அளவில் ஓய்வில் இருந்த ஒப்பந்த தொழிலா ளர்களில் 15 பேர் பணிக்கு கட்டாயப்படுத்தி, சரக்கு ஏற்ற பயன்படுத்தும் டாடா வாகனத்தில் அழைத்து வரப் பட்டுள்ளனர். அப்போது மாம்பாக்கம் என்ற இடத் தில் இவர்களது வாகனம் வந்த போது, விபத்துக்குள் ளாகி சம்பவ இடத்திலேயே 4 பேரும், மருத்துவ மனைக்கு சென்றபிறகு 2 பேருமாக 6 தொழிலாளர் கள் இறந்துள்ளனர்.
மற்ற வர்கள் படுகாயமுற்று சிகிச் சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் சரக்கு வாகனத்தில் அழைத்து வந்த ஹாவாசின் நிறுவனம் தன் னுடைய பொறுப்பை தட் டிக்கழித்து, விபத்துக்கான பொறுப்பை ஏற்க மறுக் கிறது.வேலைக்கு வரும்போது இந்த விபத்து நிகழ்ந்திருப்ப தால், அவர்கள் பணியில் இருந்தபோது விபத்து நடந்ததாகவே பாவித்து வேலையாள் இழப்பீடு சட் டப்படியான இழப்பீடு களை பெறுவதற்கும் அவர் கள் தகுதியானவர்கள்.விபத்துக்கான பொறுப் பை ஹாவாசின் நிறுவனத் தின் மீதும், ஒப்பந்தக்காரர் மீதும் காவல்துறை வழக் குப்பதிவு செய்யவும், மரண மடைந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வும், காயமடைந்து சிகிச் சை பெற்றுவரும் தொழி லாளருக்கு உயர்தர சிகிச் சையும், நஷ்டஈடும் வழங்க வும் தமிழக அரசு உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட் டங்களில் இருந்தும் கொண்டு வருகிற ஒப்பந்தத் தொழிலாளர்களை சிறை வைப்பது போன்று தக்க வைத்து, நேரம் காலமின்றி கொடூரமாக சுரண்டுகிற பன்னாட்டு நிறுவனங் களின் மீது கடும் நடவடிக் கை எடுக்கவும் தமிழக அர சை கேட்டுக் கொள்கிறேன்.இந்த கொடூரச் சம்பவத் தின் மீது உறுதியான நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன் 8ம் தேதி அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொழிற் சாலை ஆய்வாளர் அலுவல கம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்பதை தெரிவித் துக் கொள்கிறேன்.

Leave A Reply

%d bloggers like this: