விழுப்புரம், ஜூன் 6- விழுப்புரம் மாட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராபாளையம் கோமுகி 2 கூட்டுறவு சர்க் கரை ஆலை கிடங்கில் தீபிடித்ததால் எரிந்தது. சுமார் ரூ. 20 கோடி மதிப்பி லான சர்க்கரை மூட்டை கள் எரிந்து நாசமானதுகச்சிராப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை 2 ல் உள்ள சர்க்கரை கிடங் கில் அடுக்கி வைக்கப்பட்டி ருந்த சர்க்கரை மூட்டையில் தீடீரென தீபிடித்து எரிந்தது. இத னால் புகைமண்டல மாக காட்சியளித்தது. யாரும் அருகில் செல்ல முடிய வில்லை. தகவல் அறிந்த கள் ளக்குறிச்சி, சின்னசேலம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீ மேலும் பரவா மல் தடுத் தனர். உடன் ஆட்சியர் சிவ மலர் மற்றும் ஆலை நிர் வாக ஊழியர்கள் நேரில் வந்து தீயணைப்பு பணி யினை தீவிரப்படுத்தினர். எந் திரம் மூலம் சக்கரை மூட் டைகளை அப்புறப் படுத் தும் பணி நடைபெற்றது. 3 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.சக்கரை கிடங்கில் மின் தடை செய்யப்பட்டிருந் தால் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஆலை அதிகாரிகள் திருட் டுத்தனமாக சர்க் கரை மூட் டைகளை விற்பனை செய்து விட்டு தாங்கள் தப்பிப்பதற்காக தீவைத் திருக்கலாம் என்ற கோணத் திலும் போலீசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.இந்த கிடங்கில் 76 ஆயி ரத்து 871 சர்க்கரை மூட்டை கள்அடுக்கிவைக்கப்பட் டிருந்ததாகவும். தீயில் எரிந்த சர்க்கரை மூட்டைகளின் மதிப்பு சுமார் ரூ. 20 கோடி என் றும் கூறப்படு கிறது. ஆர்ப்பாட்டம் விழுப்புரம், ஜூன் 6-வி.கொளத்தூரில் இருந்து ஜானகிபுரம் வழியாக வரும் எல்லீச்சத்திரம் கால்வாயை சரிசெய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.ராமானுஜம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் என். சந்திரன் என் ரங்கநாதன், பி.சிவராமன், அழகுநாதன், உள்பட பலர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.