கோவை, மே 6-உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி கூறுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச அளவில் கொண்டாடப்படும் இத்தினத்தில் கேஎம்சிஎச் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. பசுமைப் பொருளாதார லட்சியத்தில், இயற்கையைப் பேணிக்காக்க வேண்டியது மனிதனின் தலையாய கடமையாகும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கேஎம்சிஎச் தொடர்ந்து ஈடுபடும் என்றார்.

Leave A Reply