கோவை, ஜூன் 6-தேசம் முழுவதும் உழைப்பாளி மக்கள், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 10 ஆயிரம் என்பதை சட்டமாக்கவும், காண்டிராக்ட் கொத்தடிமை முறையை ஒழித்திடவும் தொழி லாளர்வர்க்கம் ஒன்றுபட்ட போர்க் குணமிக்க போராட்டங்களை நடத்த தயாராக வேண்டும் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செய லாளர் தபன்சென் எம்.பி அழைப்பு விடுத்தார். கோவையில் கடந்த ஜூன் 2 முதல் சிஐடியு அகில இந்திய பொதுக்குழுக் கூட்டம் நடைபெற் றது. கூட்டத்தின் நிறைவில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற உழைக் கும் மக்களின் பேரணி கோவை திரு வள்ளுவர் பேருந்து நிலையத்தின் முன்பிருந்து துவங்கி 100 அடி சாலை வழியாக சிவானந்தா காலனியை அடைந்தது. அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் தபன்சென் எம்.பி சிறப்புரையாற்றி னார். அவர் பேசியதாவது:இந்திய நாட்டின் அரசியல், ஜன நாயக சக்திகள் இக்கட்டான இந்த தருணத்தில் போராட்டக்களத்தில் உள்ள தருணம் இது.
ஆளும் வர்க் கங்கள் கடைப்பிடிக்கும் அழிவுப் பாதையிலிருந்து மக்களை மீட் டெடுக்க போராட்ட உத்திகளை இப்பொதுக்குழுவில் வகுத்துள் ளோம். சிஐடியு அமைப்பு தனித் தும், இதர மத்திய சங்கங்களை ஒருங்கிணைத்தும் எதிர்காலத்தில் போர்க்குணமிக்க போராட்டங் களை நடத்த வேண்டியுள்ளது. பொதுக் கோரிக்கைகளின்பால் ஒன்று பட்ட போராட்டங்களை, ஒன்று படும் கலாச்சாரத்தை வளர்த்தது சிஐ டியு கடந்த பிப்ரவரி 28 அன்று எல்.பி.எப், எச்எம்எஸ், பிஎம்எஸ், ஜஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து வலதுசாரி, இடதுசாரி ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து வரலா ற்றில் சிறப்பானதொரு வேலை நிறுத்தத்தை நடத்தினோம். எதிர் காலத்தில் ஒரு நாள் வேலைநிறுத் தம் போதாது. பல நாட்கள் தொ டர்ச்சியான வேலை நிறுத்தப் போ ராட்டங்களை வீச்சு டன் நடத்தி யாக வேண்டும். இந்த நாட்டில் பிரதமர், முதலமைச்சர் என அனை வரும் அரசியலமைப்புச் சட்டத் தின்படி பாகுபாடு, பாரபட்ச மின்றி நடந்து கொள்வேன் என உறுதிமொழி எடுக்கின்றனர். ஆனால் இந்த நாட் டில்தான் ஒரே வேலைத் தன்மையில் நிரந்தரப்பணி, ஒப்பந்தப்பணி என பிரிக்கிறார்கள். அதேபோல் அங் கன்வாடிப் பணியாளர், மதிய உண வுப் பணியாளர்கள், ஆஷா எனப்ப டும் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு திட்டங் களில் பணியாற்றி வருகிறார்கள். எட்டுமணி நேரம் உழைத்தாலும் அவர்களுக்கு தொகுப்பூதியம், மதிப் பூதியம் என்ற வகையில் மத்திய அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் இழிவுபடுத்துகின்றன. இந்த பாரபட்சங்களை எதிர்த்தும் அடிப்படையில் நாடு முழுவதும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் மாதச் சம்பளம் என்று சட்டம் இயற்றிட வும், காண்டிராக்ட், கேசுவல், தொகுப்பூதியம், மதிப்பூதியம் உள் ளிட்ட சட்டவிரோத நடைமுறை களை ஒழித்திடவும் தீர்மானகர மான, போர்க்குணமிக்க போராட் டங்களை தொழிலாளி வர்க்கம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஏ.கே.பத்மநாபன்
உலகெங்கும் அமெரிக்க மேலா திக்கத்தை விரும்பும் கொள்கை களை அமலாக்கவும், மூலதனத்தின் பய ணத்தை தடையின்றி சுமூகமாக வழி நடத்திச் செல்லவும் ஏகாதிபத் திய சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடும் ஒரேசக்தி தொழிலாளி வர்க்கமே. இதில் மத் திய அரசும் சரி, மற்ற மாநில அரசு களும் சரி விதிவிலக்கே இல்லை. இடதுசாரிகளைத் தவிர ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று சண்டப் பிரசண்டம் செய்யும் எந்தக் கட்சி களும் உலகமய, தாராளமய, தனி யார் மயத்தை மட்டும் எதிர்ப்பதில் லை. தற்போது இந்திய நாடாளு மன்றத்தில் இடதுசாரிகளின் எண் ணிக்கை குறைந்துவிட்டதால் வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பென்சன் சீர் திருத்த மசோதாக்களை நிறை வேற்ற மத்திய அரசும் எதிர்க்கட்சி பாஜக வும் சேர்ந்தே செயல்படு கின்றன. இந்த மக்களைப் பாதிக்கிற நாசகர கொள்கைகளுக்கு எதிராக விவ சாயிகளை, விவசாயத் தொழிலாளர் களை சில்லரை வர்த்தகர்களை, சிறுமுதலீட்டாளர்களை சமூக ஒடுக்கு முறையால் பாதிக்கப் படும் தலித், பழங்குடி மக்களை, பெண்கள், வாலிபர்கள், மாணவர்கள் உள்ளிட் டோரை அணிதிரட்டி தொழிலாளி வர்க்க சிஐடியு அமைப்பு போராடும். ஆட்சியாளர் களே நீங்கள் மாறுங் கள் அல்லது நாங்கள் தூக்கியெறி வோம் என்ற வல்லமையோடு நாம் தயாராக வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந் தரராசன் எம்.எல்.ஏ நிறைவுரை யாற்றினார். சிஐடியு மாநிலத் தலைவர் ஆர். சிங்காரவேலு, துணைப்பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மற்றும் மாலதி சிட்டி பாபு, யு.கே.வெள்ளிங்கிரி, எஸ். கிருஷ்ண மூர்த்தி, எம்.கிரிஜா ஆகியோர் பேசினர்.பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் (திருப்பூர்), எஸ்.சுப்பிரமணியன் (ஈரோடு), டி.உதயகுமார் (சேலம்), கே.ஆர்.கணேசன் (திண்டுக்கல்), என்.வேலுச்சாமி (நாமக்கல்), எல். தியாகராஜன் (நீலகிரி) உள்ளிட் டோரும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், உழைக்கும் மக்கள் பங் கேற்றனர்.திண்டுக்கல் சக்தி போர்ப்பறை குழுவினரின் தப்பாட்டம் நடை பெற்றது.

Leave A Reply

%d bloggers like this: