சென்னை, ஜூன் 6-குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் செலுத்த காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கை விவரம் வருமாறு:தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் தொகுதி 4 ல் அடங்கிய இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவி களுக்கான 10718 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும், தொகுதி 8ல் அடங்கிய நிர்வாக அலுவலர் நிலை 4ல் 75 பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளியானது. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்க கடைசி நாள் இம்மாதம் 4ம் தேதி என்றும் வங்கி களில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் 6ம் தேதி என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.12 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பம் செய் துள்ளதால், அவர்களின் நலன் கருதி, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு 8ம் தேதி வரை நீட்டிக்கப் படுகிறது. மேற்படி தேர்வுக்கு விண்ணப்பம் செய்து விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள் வரும் 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்கள் தங்களது விண் ணப்பத்தின் நிலை, பணம் செலுத்திய விவரங்களை றறற. வnயீளஉநஒயஅள.நேவ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள் ளலாம். சந்தேகம் இருந்தால், 1800 425 1002 என்ற கட்டண மில்லா தொலைபேசியிலும் உடிவேயஉவவnயீளஉ@பஅயடை.உடிஅ என்ற மின் னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

Leave A Reply

%d bloggers like this: