ஓசூர், ஜூன் 6- ஓசூர் சுவாதி பள்ளி மாணவி நந்தினி பத்தாம் வகுப்பு கன்னட பாடத்தில் 100க்கு 96மதிப்பெண் பெற்று மாநிலத் தில் முதல் இடமும், மதகொண்டப்பள்ளி இனிகா பள்ளி மாணவி நவ்யா 94 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண் டாம் இடமும், பாகலூர் மகளிர் பள்ளி மாணவி அபூர்வா 94ம் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.தெலுங்கு பாடத்தில் தேன்கனிக்கோட்டை வட்டம் பெத்த பேல கொண்டப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவன் கார்த்திக் 95 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடமும் 500க்கு 470 மொத்த மதிப்பெண் பெற்று தெலுங்கு பள்ளியில் முதல் இடமும் பெற்றுள்ளார்.இந்தப் பள்ளி கடந்த நான்கு வருடமாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் காலனி அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 91 விழுக் காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். தேன்கனிக்கோட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் வி. பாலாஜி 100க்கு 484 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலி டமும் தேர்வெழுதிய 58 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.மேலும் 8 மாணவர்கள் கணிதம், அறி வியல், சமூகஅறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் களும் பெற்றுள்ளனர்.

Leave A Reply