புதுதில்லி, ஜூன் 6 -ஏற்றுமதியை அதிகரிக்க, வட்டி மானியத் திட்டத்தை 2013 மார்ச் 31 வரை ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்வது உள்பட 7 அம்ச திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க் கிழமையன்று அறிமுகம் செய்தது.வெளிநாட்டு வர்த்தக கொள்கை தொடர்பான வரு டாந்திர கூடுதல் சேர்க்கையை வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தில்லியில் வெளியிட்டு கூறுகையில், வட்டி மானியம் 2013 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், பொம்மைகள், விளையாட்டுப் பொருட் கள், பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள், ஆயத்த ஆடைகள் துறைகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.இந்த ஆண்டு கூடுதல் சேர்க்கை கொள்கையில் 7 விரி வான குறிக்கோள்கள் உள்ளன. இதில் தொழிலாளர்கள் அதிகம் உள்ள துறை இடம்பெற்றுள்ளது. நடப்பு நிதி யாண்டில் 20 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி உறுதிப்படுத் தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.2011-12ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 21 சதவீதம் அதிகரித்து, 30 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது.ஏற்றுமதியை ஊக்கப்படுத்த கைத்தறி, கைவினைப் பொருட்கள், தரைவிரிப்பு சிறிய, நடுத்தர நிறுவனத்துறை பொருட்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் தரப்பட்டது. 2012 மார்ச் 31ல் முடிவடைய வேண்டிய இத்திட்டம், தற்போது ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்கவும் பசும்பொருட்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை அளிக்கவும் 7 அம்ச திட்டத்தில் வழிவகுக்கப் பட்டுள்ளது என்ற அமைச்சர் ஆனந்த் சர்மா, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பாடு துடிப்புடன் இருக்க புதிய வரையறை கொண்டுவரப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: