உதகை, ஜூன்.6-உதகை எச்பிஎப் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். சிஐடியு சங்கத்தின் சார்பில் எச்பிஎப் தொழிற்சாலையின் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு செயல் தலைவர் ஜே.ஆல்தொரை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆர்.மோசஸ் மனோகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் எச்பிஎப் தொழிலாளர்களுக்கு 97ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இத்தர்ணாவில் சங்க நிர்வாகிகள் ஜம்பு, சாமெல்சன், ராஜேந்திரன், மரிய ஜக்கிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும். இக்கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக இம்மாத இறுதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: