நாமக்கல், ஜூன் 6-நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் பெருந்துறை டிஎம்டபிள்யு நிறுவனம், இராசிபுரம் ஸ்ரீ ராகவேந்திரா , வெண்ணந்தூர் அங்கப்பா, பரமத்தி வேலூர் ஜீவா ஆகிய தொழில்நுட்பக் கல்லூரிகளிலும், கள்ளக்குறிச்சி விஸ்வம் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி மூலமும், சிஎன்சி புரோகிராமிங் மற்றும் ஆபரேசன், இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கப் பயிற்சி, எலக்ட்ரிக்கல் ஒயர்மேன் பயிற்சி மற்றும் ஜேசிபி, கிரேன் மற்றும் போர்க்லிப்ட் ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், 2011-12ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிகள் இளைஞர், இளம்பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கூடுதல் மாணவர்கள் சேர்ப்பதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, புதுச்சத்திரம், மோகனூர், பரமத்தி, கபிலர் மலை ஆகிய பகுதிகளுக்கு ஜூன் 14ம் தேதி காலை 9.30 மணி முதல் நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் , இராசிபுரம், வெண்ணந்தூர், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு ஜூன் 14 மதியம் 2 மணி முதல் இராசுபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு ஜூன் 14 காலை 9.30 மணி முதல் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயதுடைய இருபாலரும், சுய உதவிக்குழு உறுப்பினர்களும், தங்களது பிறப்பு சான்று, சாதிச்சான்று மற்றும் கல்வி தகுதிக்கான ஆவணங்களின் அசலுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இதற்கான பயிற்சிக் கட்டணத்தை அரசே ஏற்கும். மேலும், பயிற்சியில் தேர்வாகும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு, திட்ட அலுவலர், மகளிர் திட்டம், நாமக்கல், தொலைபேசி எண் 04286 281131 -ஐ தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

%d bloggers like this: