இந்திய – ரஷ்ய இணை லியாண்டர் பயஸ்-எலினா வெஸ்னினா பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் அரைஇறுதிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் பெலாரஸ் அமெரிக்க இணையான மாக்ஸ் மிரின்யி-லீஸல் ஹூபர் இணையை 4-6, 7-5, 10-5 என்ற செட்டுகளில் வென்றனர்.ஆடவர் ஒற்றையரில் ரோஜர் பெடரரும், ‘ஜோகோவிக்கும் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் இருவருமே கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து திறமையுடன் ஆடி வென்றனர். பிரான்சின் டிசோங்கா வெற்றியின் விளிம்பில் நான்குமுறை ஏறி இறங்கினார்.ஜோகோவிக் தனது அனுபவம், மன உறுதி, திறமை என அனைத்தையும் பயன்படுத்தும் கட்டாயத்தை அவர் உருவாக்கினார்.முதல் செட்டை ஜோகோவிக் 6-1 என எளிதில் வென்றார். அடுத்த இரண்டு செட்டையும் டிசோங்கோ 7-5, 7-5 என கைப்பற்றினார். நான்காவது செட்டில் டிசோங்கா 6-5 என முன்னிலை பெற்றிருந்தபோது, அதை வெல்வதற்குக் கிடைத்த நான்கு வாய்ப்புகளையும் டிசோங்கா நழுவவிட்டார். டை பிரேக்கரில் ஜோகோவிக் 8-6 என வென்றார். ஐந்தாவது செட்டை ஜோகோவிக் 6-1 என எளிதில் வென்றார்.மற்றொரு கால் இறுதியில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். ரோஜர் பெடரர் அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் பெட்ரோவை 3-2 என்ற செட்டுகளில் வென்றார். மகளிர் ஒற்றையரில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-4, 6-1 என்ற புள்ளிகளில் டொமினிகா சிபுல்கோவாவை வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் இத்தாலியின் சாரா எர்ரானி 6-3, 7-5 என்ற செட் புள்ளிகளில் ஏஞ்சலிக் கெர்பரை தோற்கடித்தார்.

Leave A Reply

%d bloggers like this: