புதுக்கோட்டை, ஜூன் 6-அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக ளுக்கு கடிவாளம் போட தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு மார்க் சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் கேட்டுக்கொண்டார்.புதுக்கோட்டை சட்ட மன்றத் தொகுதிக்கு உட் பட்ட புதுக்கோட்டை நக ரம், வெட்டன்விடுதி, மழை யூர், ஆதனக்கோட்டை உள் ளிட்ட பல்வேறு இடங்க ளில் செவ்வாய்க்கிழமை யன்று தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் மேலும் கூறிய தாவது:-அதிமுக அரசு உள்ளாட் சித் தேர்தல் முடிந்த கை யோடு வரலாறு காணாத அளவிற்கு பால்விலை, பேருந்து, மின்கட்டணங் களை உயர்த்தியது. அரை லிட்டர் பால் வாங்கக்கூடிய ஒரு குடும்பத்திற்கு மாதம் நூறு ரூபாய் கூடுதலாக செலவாகிறது. சேர்ந்து டீ அருந்திய பழக்கம் போய் யாருக்கும் தெரியாமல் கடைக்குச் செல்லும் அள விற்கு விலை உயர்வு நட்புக் குக்கூட உலை வைக் கிறது. மின் கட்டணத்தை 150 சத வீதத்திற்கு மேல் உயர்த்தி வருடத்திற்கு ரூ.7400 கோடிக்கு மேல் மக்கள் தலையில் கட்டுகிறது.
மேலும், வருடத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் மக் களிடம் பல்வேறு வரியாகப் போட்டு வதைக்கிறது இந்த அரசு.லேப்டாப், மிக்சி, கிரைண்டர் போன்ற விலை யில்லாத் திட்டங்களோடு ஒப்பிடும் போது இந்த அரசு மக்களுக்குக் கொடுத்ததை விட, அவர்களிடமிருந்து பறித்ததே அதிகம். இப்படி ஆளுங்கட்சி மக்களை கடு மையாகத் தாக்கும் பொழுது மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளால் வேடிக் கை பார்க்க முடியாது.சட்டம்-ஒழுங்கு கட்டுக் குள் இருக்கும். மணல் கொள்ளையர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் படுவார்கள். வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆந்திரா விற்கு ஓடி விட்டார்கள் என் றெல்லாம் முழங்கினார்கள். ஆனால் இவர்களின் 11 மாத ஆட்சியில் 12 லாக்கப் மரணங்கள் நிழந்துள்ளன. எந்த முகாந்திரமும் இல்லா மல் பரமக்குடியில் 6 அப்பா வித் தலித்துகள் போலீசா ரால் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். நெல்லை நம் பியாற்றில் மணல் கொள் ளையைத் தடுக்க முயன்ற சதீஸ் என்ற இளைஞர் லாரியால் ஏற்றிக் கொல்லப் பட்டார். அந்த லாரியின் உரிமையாளர் அதிமுக வைச் சேர்ந்தவர். அவர் மீது இதுவரை ஏதாவது நடவ டிக்கை உண்டா?ஆளுங்கட்சியின் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதி யான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி என்கிற ஆணவத்தில் எத்தகைய அதிகாரத்தையும், அராஜ கத்தையும் கட்டவிழ்த்து விட்டாலும் எதிர்த்து நிற் கும் தைரியம் தேமுதிகவிற் கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் உண்டு. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்றால் ஆட்சி கவிழாது. தேமுதிக வெற்றி பெற்றால் தங்கள் மக்கள் விரோத நடவடிக் கைகளை திருத்திக் கொள்ள, அதற்கு ஒரு கடிவாளம் போட இதுவொரு வாய்ப் பாக இருக்கும்.இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நடைமுறையை புதுக்கோட்டை தொகுதி வாக் காளர்கள் திருத்தி எழுத வேண்டும். புதுக்கோட்டை — தொடர்ச்சி 3ம் பக்கம்

Leave A Reply

%d bloggers like this: