குடியாத்தம், ஜூன். 5-
வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 90 விழுக் காடு பெற்று சாதனை புரிந் துள்ளது. பள்ளியில் முதலாவதாக எஸ். விஸ்ணு 440, இரண் டாவதாக திருமால் 438, மூன்றாவதாக டி. ஜெயபிர காஷ் 434 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 400 மதிப் பெண்களுக்குமேல் 11 மாண வர்கள பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர் களை பள்ளியின் கவுரவ தலை வர் கு. லிங்கமுத்து எம்எல்ஏ, நகரமன்ற உறுப்பினர் அமுதாசிவராமன், பள்ளி பெருளாளர், ஆசிரியர்கள் பாராட்டினர்.அரசு பள்ளி என்றாலே பெற்றோர்களிடம் ஒரு தயக் கம் உள்ளது. இதனை போக்க பள்ளி கூடுதலான ஆசிரியர் களை நியமனம் செய்து மாண வர்களுக்கு என சிறப்பு பயிற் சிகள் அளிக்கப்பட்டது. இதற்காக கடுமையாக உழைத்த ஆசிரியர்களை யும், மாணவர்களையும் தலைமை ஆசிரியர் பராட்டினார்.

Leave A Reply

%d bloggers like this: