காரகஸ், ஜூன் 5-வெனிசுலாவில் ஆயுதங் கள் மற்றும் வெடிமருந்து களை விற்க அதிபர் ஹியூ கோ சாவேஸ் தடைவித் துள்ளார். வெனிசுலாவில் நிகழும் வன்முறைகளை தடுப்பதற்காகவே இம்மு டிவை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.வெனிசுலாவில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறு திப்படுத்தவும், குற்றவாளி கள் மற்றும் வன்முறையா ளர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற இந்த அரசு தொடர்ந்து பல்வேறு முயற் சிகளை எடுத்து வருகிறது. மேலும், மனிதர்களின் உயி ரின் மதிப்பை உணரும் வகையில், ஆயுதங்களால் ஏற்படும் வன்முறைகளை குறைத்து, அந்த ஆயுதங் களை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் வண்ணம் மக்களை தயார்ப்படுத்த வேண்டும் என்று சாவேஸ் கூறினார்.இதுகுறித்து குற்றவியல் சட்டப் பேராசிரியர் ஒரு வர், வன்முறைகளைக் குறைக்க வேண்டுமெனில் சட்டம் இயற்றுவது மற் றும் பொதுக் கொள்கை களை வகுப்பது மட்டும் போதாது, தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை உள்ள டக்கிய பல உத்திகளை மேற் கொள்ள வேண்டும் என் றும் அரசுக்கு பரிந்துரைத் துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: