புதுக்கோட்டை, ஜூன் 5-மக்கள் தலையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு சுமையை ஏற்றிவைப்பதுதான் சாத னையா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினரும், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பின ருமான இரா.அண்ணாத்துரை கேள்வி எழுப்பினார்.புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிக வேட் பாளர் என்.ஜாகீர்உசேனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடந்த இரண் டாம் தேதி முதல் தீவிரப் பிரச் சாரம் செய்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டை நகரில் நடை பெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட இரா.அண்ணாதுரை மேலும் பேசியதாவது:இந்த ஆட்சி மக்கள் மீதான தாக்குதல்களை மிகப்பெரிய அளவில் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து களின் வழித்தடங்களை மேம் படுத்தி அவற்றின் வருமா னத்தை பெருக்க வேண்டும் என நாங்கள் சட்டமன்றத்தில் பேசிய போது, அரசுப் பேருந் துகள் லாபத்தை நோக்கமாகக் கொண்டு இயக்கப்படவில்லை. மக்கள் சேவைக்காக நடத்தப் படுகிறது என்றார் முதல்வர்.
பிறகு ஏன் பேருந்துக் கட்ட ணங்களை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தினீர்கள். மக்கள் நலனில் அக்கறை இருந்தால் போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியத்தை வழங்கியிருக்க வேண்டாமா?தேசிய பால்வள வாரியம் ரூ. 160 கோடியை தரத் தயாராக இருக்கிறது. அதற்கு கூட்டுறவு சங்கத் தேர்தல் களை நடத்தி முறைப்படுத்த வேண்டும். இதை ஆந்திரம், கர்நாடகா மாநிலங்கள் செய்யும் போது தமிழக அரசு ஏன் செய் யக்கூடாது என்று சட்டமன்றத் தில் நாங்கள் கேள்வி எழுப்பிய போது, எந்த அமைச்சரும் வாய் திறக்க வில்லை. இதே போல ஒரு லிட்டர் பாலைப் பதப் படுத்த தமிழக அரசு ரூ.1.50 செலவிடுகிறது. பக்கத்து மாநில மான கர்நாடகாவில் இயற்கை எரிவாயு மூலம் வெறும் 26 பைசா மட்டுமே செலவிடு கிறது. இது குறித்துக் கேட்ட போதும் எந்தப் பதிலும் இல்லை. ஆனால் பால்விலையை உயர்த்தி மக்களை வதைக்கிறார்கள்.சட்டமன்றக் கூட்டத் தொடர் தேதியை அறிவித்து விட்டு, மரபை மீறி தன்னிச் சையாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேலே மறைமுக வரியை விதித்தார்கள். இப்படி பல் வேறு வகைகளில் வருடத் திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே மக்கள் தலையில் வரி யைப் போட்டு விட்டு, ஓராண் டில் நூறாண்டு சாதனை என கூசாமல் பேசுகிறார்கள்.காவல் துறையில் தடி மட்டுமே இருக்க வேண்டும். அதன் பிடி முதல்வரிடம் இருக்க வேண்டுமெனச் சொன்னோம். ஆனால் இந்த அரசு பொறுப் பேற்று 11 மாதங்களுக்குள் 6 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள் ளன. நீதிமன்றமே இந்த அர சைக் கண்டிக்கும் அளவிற்கு காவல் நிலையத்திலேயே பாலி யல் வன்முறைகள் நடந்திருக் கின்றன. எந்த முகாந்திரமும் இல்லாமல் பரமக்குடியில் 6 அப்பாவித் தலித்துகள் உயி ரைக் குடித்ததுதான் தமிழக அரசின் சாதனையா? மணல் கொள்ளையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார் முதல்வர். தூத்துக்குடி மாவட் டத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற சதீஸ் என்ற இளைஞர் மீது லாரியை ஏற்றிக் கொல் லப்பட்டது இந்த ஆட்சி யில் தான். வேலூர் மாவட்டத் தில் மணல் கொள்ளையை தடுக்கும் முயற்சியில் இருந்த கிராம உதவியாளர் உயிரோடு புதைக்கப்பட்டதும் இந்த ஆட்சி யில்தான்.இவ்வாறு அவர் பேசினார்.பிரச்சாரத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் நகரச் செய லாளர் சி.அன்புமணவான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ. எஸ்.ராஜ சேகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் ப.சண்முகம், முன் னாள் நகர்மன்ற உறுப்பினர் சண்முக பழனியப்பன், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எம்.ஜியாவுதீன், கே.சண்முகம், ஏ.ஸ்ரீதர், கே.முகமதலி ஜின்னா, மிசா.மாரிமுத்து, எம்.சண் முகம், டி.சலோமி, எம்.ஆர்.சுப் பையா, அரசுமுகம், கே.தங்க வேல், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந் தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பிரச்சாரம் புதுக்கோட்டை-திருவப்பூரில் துவங்கி மியூசி யம், திருக்கோகர்ணம், காம ராஜபுரம், தபால்நிலையம், போஸ்நகர், காந்திநகர், அய்ய னார்புரம், டி.வி.எஸ்.கார்னர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று இறுதியாக புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.

Leave A Reply

%d bloggers like this: