ரஷ்யா, ஜூன் 5-ரஷ்யாவின் சுகோஷ் சூப்பர்ஜெட் விமானம் மே மாதம் 9ம் தேதி இந்தோ னேஷியாவின் சலக் மலை யில் மோதி விபத்துக்குள்ளா னது. இதில், விமானத்தில் பயணம் செய்த 45 பேரும் உடல் கருகி பலியாகினர். இவ்விபத்திற்கு மோசமான வானிலையே காரணம் என கூறப்பட்டது. ஆனால், இவ் விபத்திற்குப் பின்னணியில் அமெரிக்காவின் நாச வேலை இருப்பதாக அதிர்ச் சித் தகவல்கள் வெளியாகி யுள்ளன.விமானம் விபத்துக்குள் ளாகி சில நாட்களுக்குப் பின்னர் விமானத் தகவல் பதிவுக் கருவியை இந்தோ னேஷிய மலைக்கிராம மக் கள் கண்டுபிடித்தனர். மேலும், விமானத்தின் உயரம், வேகம் மற்றும் வழித்தடம் ஆகிய வற்றை பதிவு செய்துள்ள இப்பெட்டி நல்ல நிலையில் உள்ளதாக இந்தோனேஷிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் தலை வரான துணை மார்ஷல் டாரியாட்மோ தெரிவித் துள்ளார்.இதேபோல், விமானம் விபத்துக்குள்ளாகி ஆறு நாட்களுக்குப் பிறகு, மே 15ம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டியும் கண் டெடுக்கப்பட்டது. விமான விபத்திற்கான காரணத்தை அறிவதற்காக இவ்விரு பெட்டிகளையும், இந்தோ னேஷியா மற்றும் ரஷ்யா வின் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர்.
பின் னர், இதுகுறித்து புலனாய் வாளர்கள் தெரிவிக்கையில், நல்ல நிலையில் விமானம் இயங்கிக் கொண்டிருந்த வேலையில் விமானத்தில் எவ்வித கோளாறும் ஏற்பட வில்லை. ஆனால் அதற்கு வரும் தகவல் தொடர்பு இடைமறித்து தடை செய் யப்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது. பொதுவாக இதுபோன்ற தகவல் பரி மாற்றத்தை இடைமறிக்கும் தொழில்நுட்பம், போர் நடைபெறும் காலங்களில் மட்டுமே பயன் படுத்தப்படும். இதற்கான வசதியையும், தொழில்நுட் பத்தையும் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அது போன்ற தகவல் பரிமாற்ற இடைமறிப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே சுகோஷ் சூப்பர் ஜெட் விமானத்தின் தகவல் பரி மாற்றமும் தடுக்கப்பட்டி ருக்கிறது. இதன் காரணமா கவே விமானம் விபத்துக் குள்ளாகியிருக்கிறது. இதன் பின்னணியில் அமெரிக் காவே இருக்கக் கூடும் என சந்தேகிக்கிறோம். மேலும் இது போன்ற செயல்களில் இந்தோனேஷியாவின் தலைநகரமான ஜகார்த்தா வில் உள்ள ஹாலிம் விமான நிலையத்தில் அமெரிக்கா வின் ராணுவ மின்னணு வல் லுநரின் இது போன்ற செயல்பாட்டை ஏற்கனவே ரஷ்யா கண்காணித்து வந் திருக்கிறது என தெரிவித் தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.