தஞ்சாவூர், மே 5-கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் எஸ். பெரியசாமி மூப்பனாரை, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ நேரில்சந்தித்து நலம் விசாரித்தார்.கும்பகோணத்தில் தற்போது ஜவுளி வியாபாரம் செய்துவரும் எஸ்.பெரியசாமி மூப்பனார், விருதுநகர் மாவட்டத்தில் ஒன் றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தின் முன்னணி தலைவராக செயல்பட்டவர் ஆவார். இராம நாதபுரம் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடு மைக்கு ஆளானவர். 1952ல் கைத் தறி நெசவாளர்கள் வேலை யில்லாமல் கடும் வறுமையில் வாடிய போது அன்றைய முதல் வர் இராஜாஜியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு கொடுப்பதற்காக ஸ்ரீவில்லிபுத் தூரிலிருந்து ‘பட்டினிப் பட் டாள பாதயாத் திரை’யை தலை மையேற்று நடத்தியவர். அவ ருக்கு தற்போது வயது 86.அண்மையில் கும்பகோ ணம் வந்த மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரரா சன் எம்எல்ஏ, மூத்த தலைவர் எஸ்.பெரியசாமி மூப்பனாரை நேரில்சந்தித்து நலம் விசாரித்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர். மனோ கரன், சின்னை.பாண் டியன், மாவட்டக் குழு உறுப்பினர் கண் ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: