அம்பத்தூர், ஜூன் 5 –
மதுரவாயல் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முகப்பேர் மேற்கு 2வது பிளாக் பொது நலச் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய் திருந்த மக்கள் குறை கேட்பு முகாமில் சட்டமன்ற உறுப் பினர் க.பீம்ராவ், 91வது வட்ட மாமன்ற உறுப்பி னர் பி.வி.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு குறை களை கேட்டறிந்தனர்.கழிவு நீர் கால்வாய் பிரச்சினை, குடிநீர் பிரச் சினை, கொசுத் தொல்லை, குப்பைகள் சரியாக அள்ளப் படுவதில்லை, சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும், சமூக நலக் கூடத்தை சீர மைக்க வேண்டும், நூலகம் அமைத்து தர வேண்டும், நாய்களின் தொல்லை, பேருந்து நிலையம் உள் ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
குறைகளை கேட்ட க.பீம்ராவ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிலையத்தை சீரமைக்க 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்த புள்ளி கள் கோரப்பட்டு உள்ளதா கவும், இன்னும் 10 நாட்க ளுக்குள் பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கி விடும் என்றார். மேலும் தனது இந்த ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நூலகம் அமைத்துத் தருவ தாகவும், கழிவு நீர் பிரச்ச னைகளையும், குடி நீர் பிரச் சனைகளையும் அதிகாரிக ளிடம் கூறி சீரமைத்துத் தருவதாகவும் கூறினார்.பி.வி.தமிழ்செல்வன் பேசு கையில், சமூக நலக் கூடம் சீரமைக்க 78 லட்ச ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் விரை வில் கட்டப்படும் என்றும், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வும், சாலை வசதிகளை குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிந்தவுடன் படிப் படியாக செய்து தருவதாக வும் கூறினார்
. மேலும் ஏறக் குறைய இதுவரை 160 நாய் கள் பிடிக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.இச்சந்திப்பின் போது 2வது பிளாக் சங்க நிர்வா கிகள் இ.சீனிவாசன், ஆர். பாலாஜி, ஆர்.முருகேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி கள் கோவிந்தன், மதுரை வீரன், சுப்பிரமணி, பிச்சை யம்மாள், தாரா, இந்திரன், தேமுதிக நிர்வாகி பழனி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண் டனர்.

Leave A Reply

%d bloggers like this: