திருவாரூர், ஜூன் 5-திருவாரூர் மாவட்டத் தில் மகளிர் திட்டம் சார்பில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க பயிற்சிக்கான மாவட்ட பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ள னர். இப்பணிக்குத் தகுதியா னவர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.விண்ணப்பிக்க விரும்பு வோர் குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். மகளிர் திட்ட செயல்பாடுகள் தொடர்பாக தெரிந்திருக்க வேண்டும். திட்டம் சார்ந்த பயிற்சியில் 5 முதல் 8 ஆண் டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும். பிரபல தொண்டு நிறுவனம் மற்றும் சமுதா யம் சார்ந்த அமைப்புகளில் (சிபிஓ) பயிற்சியாளராக பணியாற்றி வருபவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையைச் சார்ந்த பணி ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிக திறன் வாய்ந்த முன் னாள் பயிற்றுநர்கள், மாவட்ட அளவிலான முன் னாள் முதன்மை பயிற்சியா ளர்கள், புதுவாழ்வுத்திட்ட முன்னாள் அலுவலர்கள் ஆகியோரும் விண்ணப்பிக் கலாம்.மகளிர்திட்ட சுயஉதவிக் குழுவின் வரவு-செலவு விப ரங்களை பதிவு செய்ய தெரிந் திருக்க வேண்டும். வெளி மாவட்டங்களுக்கு சென்று பயிற்சி பெறவும், பயிற்சி அளிக்கவும் விருப்பம் உள் ளவர்களாக இருக்க வேண் டும்.விண்ணப்பங்கள் மக ளிர் திட்ட அலுவலகத்திற்கு வரும் ஜூன் 12ஆம் தேதிக் குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவல கங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண் டாவது தளத்தில் அறை எண்.89ல் இயங்கி வரும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களை 04366-221031 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.நட ராசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply