தஞ்சாவூர், ஜூன் 5-தஞ்சாவூர் மாவட்டத் தில் 10ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை எழுதிய 36 ஆயிரத்து 739 பேரில் 33 ஆயிரத்து 153 மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற் றுள்ளனர்.இது 90.2 சத வீத தேர்ச்சியாகும்.தஞ்சை கல்வி மாவட் டத்தில் 10 ஆயிரத்து 586 பேர் தேர்வு எழுதியதில் 9 ஆயிரத்து 800 பேர் தேர்ச் சிப் பெற்றுள்ளனர். பட்டுக் கோட்டை கல்வி மாவட் டத்தில் 12 ஆயிரத்து 302 பேர் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கும்பகோ ணம் கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 851 பேர் தேர்வு எழுதியதில் 12 ஆயிரத்து 241 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் முதலிடம் பெற்ற தஞ்சை பொன் னையா ராமஜெயம் பப்ளிக் பள்ளி மாணவர் பி.ஸ்ரீநாத் தமிழ்பாடத்தில் மட்டும் 97 மதிப்பெண்களும் மற்ற அனைத்துப் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று 497 மதிப்பெண் பெற்று மாநில, மாவட்டத் தில் முதலிடம் பெற்று தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மாவட்டத்தில் 494 மதிப் பெண்கள் பெற்று தஞ்சை தூய இருதய மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி மோனிஷா இரண்டாமிடத் தையும், 493 மதிப்பெண்கள் பெற்று தஞ்சை டான் போஸ்கோ மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் அரவிந்த், கமலா சுப்பிர மணியம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்.பிரசன்னா, மாணவிகள் ஜி.தாரணி, ஆர். யாழினி மற்றும் இமாகுலேட் மெட் ரிக் பள்ளி ஹாஜிரா நஸ்ரீன் ஆகிய ஐந்து பேர் மூன்றா மிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவியரை தஞ் சாவூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சீ.சுரேஷ்குமார் அழைத்து பாராட்டி பரி சளித்தார். மாணவ-மாணவி யரின் b பற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட கல்விநிலை நிலையங்களின் தலைமை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: