மன்னார்குடி, ஜூன் 5-1996ம் ஆண்டு துவங்கப் பட்ட ‘ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் 7 இளநிலைப் பிரிவுகளும், 5 முதுநிலைப் பிரிவுகளும் பொறியியல், தொழில்நுட்பம், கணினி பயன்பாட்டுத் துறை மற் றும் மேலாண்மை துறை களில் பயிற்றுவிக்கப்படு கின்றன.கல்லூரி வளாகத்தி லேயே மாணவர்கள் – மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன.2 ஆயிரம் மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். 135 பேராசிரியர்கள், 120 ஆசிரியர்கள் அல்லாத பணி யாளர்கள் கல்விப் பணி யாற்றி வருகின்றனர். வசதி யான கட்டிடங்கள், காற் றோட்டமான வகுப்பறை கள், 8,156 சதுர அடி பரப் பளவுள்ள தனித்த நூலகக் கட்டிடம், கணிப்பொறி ஆய்வகம், ஆய்வகக் கூட வசதிகள், 44,500 நூல்களு டன் கூடிய நூலக வசதி, எந்த நேரமும் பயன்படுத்த இணையதள வசதியும், மின் வசதியும், பாதுகாவலர்கள் வசதி, ஏடிஎம் வசதி ஆகி யவையும் உள்ளன.முனைவர் சி.லோக நாதன் முதல்வராகவும், முனைவர் எஸ்.செல்வமுத் துக்குமரன் துணை முதல் வராகவும் உள்ளனர். இக் கல்லூரி ஐஎஸ்ஓ 9001:2008 எனும் தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்கிறது. என்பிஏ தரச்சான்றிதழ் இசிஇ, ஐடி மற்றும் எம்.சி.ஏ. பாடப்பிரி வுகளுக்கு வழங்கப்பட்டுள் ளது. வெளியூரிலிருந்து வரும் மாணவர்களுக்காக 12 பேருந் துகள் இயக்கப்படு கின்றன.மேற்கண்ட தகவல் களை ஜே.மணிகண்டன் (தலைவர்), சி.செந்தில்வேல் (செயலாளர்), எஸ்.சுகுமார் (பொருளாளர்) ஆகியோர் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: