புதுக்கோட்டை, ஜூன் 5-புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளராக போட்டியிடும் என். ஜாகீர்உசேனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனும் புதனன்று (6.6.2012) பிரச்சாரம் செய்கின்றனர்.புதன்கிழமையன்று புதுக்கோட் டை அண்ணா சிலை அருகிலிருந்து ஜி.ராமகிருஷ்ணன் கறம்பக்குடி மற் றும் புதுக்கோட்டை ஒன்றியங்களில் பிரச்சாரம் செய்கிறார். கறம்பக்குடி ஒன்றியம் வெட்டன்விடுதியிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கும் விஜயகாந்த் மூன்று நாட்கள் தொகுதி யிலேயே தங்கி, பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்கின்றார். புதன்கிழ மையன்று மாலையில் கறம்பக்குடி ஒன்றியம் மழையூரில் விஜயகாந்த்தும் ஜி.ராமகிருஷ்ணனும் ஒரே மேடை யில் முரசு சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய் கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: