இஸ்லாமாபாத்: 700 கி.மீ. தூரம் பாய்ந்து இலக்கை தாக்கக்கூடிய ஹட்ப்-7 அணு ஏவுகணையை பாகிஸ்தான் செவ்வாய்க்கி ழமை நடத்தியது. இந்த ஏவு கணை இந்தியாவில் உள்ள அதிக தூர இலக்குகளை தாக்கக்கூடியது.ஏவுகணை சோதனை அடையாளம் குறிப்பிடாத இடத்தில் இருந்து நடத்தப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றி என ராணுவம் விடுத் துள்ள அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் இறுதியில் இருந்து, பாகிஸ்தான் நடத் தும் 5வது சோதனை இது வாகும். தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், பாகிஸ்தானின் நிலைப் பாட்டு உறுதித்தன்மையை தொகுக்கவும் ஹட்ப்-7 ஏவு கணை சோதனை நடந்துள் ளது என ராணுவம் கூறியுள் ளது. உள்நாட்டிலேயே உரு வாக்கப்பட்ட ஹட்ப் பல குழாய் ஏவுகணை முறையை சார்ந்தது. இதற்கு பாபர் என்ற பெயரும் உள்ளது.வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் உள்ளதாக இந்த ஏவுகணை திகழ்கி றது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆசிப் அலி ஜர் தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோர் ஏவு கணை தயாரிப்புக்கு பாடு பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.