ஸ்ரீபெரும்புதூர், ஜூன் 5-பழுதாகி நின்றிருந்த லாரி மீது லோடு வேன் மோதியதில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த னர். ஸ்ரீபெரும்புதூர் அருகே நள்ளிரவில் நடந்த இந்த பயங்கரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுகோட்டையில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கட்டுமானப்பணிநடக்கிறது. இங்கு, பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர் கள் வேலை பார்த்து வரு கின்றனர். இவர்கள், காஞ்சி புரம் அருகே பிள்ளைசத்தி ரம் பகுதியில் தங்கியுள்ள னர்.மினி லோடு வேனில் நள்ளிரவு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் இவர்கள், வேலை முடிந்த தும், மறுநாள் மதியத்துக்கு பிறகு அதே வேனில் திரும்ப அழைத்து வரப்படுவது வழக்கம். இதுபோன்று திங்களன்று (ஜூன் 4)நள்ளி ரவு 12 மணியளவில் ஊழி யர்கள் 14 பேர், வேனில் ஏற் றப்பட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட னர். காஞ்சிபுரம் அருகே ராஜகுளத்தை சேர்ந்த ஓட்டு நர் மணிகண்டன் (22) என்ப வர் வேனை ஓட்டிச் சென் றார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கத்தில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் லோடு வேன் அதிவேகமாக சென்றது. அப்போது திடீரென கட்டுப் பாட்டை இழந்த வேன், சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது பயங் கரமாக மோதியது. இதில், வேனில் பயணம் செய்த அனைவரும் அலறி துடித்த னர். சம்பவ இடத்திலேயே மணிகண்டன் (22), ஒடி சாவை சேர்ந்த அணில் ராவூத் (19), பீகாரை சேர்ந்த ராம்தேவ் (45), சாதேவ் (50), 4 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.சிலர் பலத்த காயங்களு டன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தை பார்த்ததும், அப்பகுதியில் சாலையோர டீக்கடை வைத்திருந்த சிலர் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீ பெரும்புதூர் டிஎஸ்பி கஜேந் திரகுமார், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 10 பேரை சென்னை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த சிரமன் (19) சிகிச்சை பலனின்றி இறந் தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply