சர்வதேச அளவில் நடைபெற்றுவரும் நட்புப்போட்டிகள் ஒன்றில் மெக்சிகோ 2-0 என்ற கோல்களில் பிரேசிலைத் தோற்கடித்தது. மெக்சிகோ வீரர்கள் டோஸ் சான்டோஸ் (21ம் நிமிடம்), சேவியர் ஹெர்னாண்டஸ் (32ம் நிமிடம்) ஆகியோர் மெக்சிகோவின் கோல்களை அடித்தனர்.ஐந்து முறை உலகக்கோப்பையை வென்றுள்ள பிரேசில் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இளைய வீரர்களை அதுசோதித்துப் பார்க்கிறது. மறுபுறத்தில் மெக்சிகோ உலகக்கோப்பை தகுதிப்போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. வெள்ளிக்கிழமையன்று மெக்சிகோ நகரில் நடைபெறும் உலகக்கோப்பை தகுதிப்போட்டியில் கயானாவுடன் மெக்சிகோ மோதுகிறது.மெக்சிகோ 22ம் நிமிடத்தில் முதல் கோலைப்போட்டது. பிரேசிலின் கோல் சதுக்கத்தின் இடது மூலையில் நுழைந்த டோஸ் சான்டோஸ் பந்தை பிரேசில் கோலின் வலது மூலையை நோக்கி வெட்டி உதைத்தார். பந்து கோல் கீப்பர் ராபெல் கப்ராலை ஏமாற்றிவிட்டு உள்ளே சென்றது.32ம் நிமிடத்தில் பிரேசில் கோல் அருகே பந்துடன் இருந்த டோஸ் சான்டோஸை பிரேசில் வீரர் ஜூவான் ஜூசப் கீழே தள்ளிவிட்டார். தேவையில்லாத செயல் இது. சான்டோஸ் பிரேசிலின் கோலுக்குள் முதுகைக் காட்டியபடி நின்றார். இதனால்கிடைத்த பெனால்டியை ஹெர்னான்டஸ் கோலுக்குள் உதைத்தார். முன்னதாக பிரேசில் வீரர் லியான்ட்ரோ டாமியாவோ அடித்த கோலை நடுவர் ஆப்சைட் எனக்கூறி நிராகரித்தார்.

Leave A Reply

%d bloggers like this: