நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு வகையான பயிற்சிகளை செய்துவருகிறோம். இப்பயிற்சிகளின் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை பெற்று நாம் நோயின்றி வாழ வழிவகுக்கிறது. தற்பொழுது இயற்கை சூழல் மிகுந்த பகுதியில் நடைபயற்சி செய்வதன் மூலம் நமது ஞாபக சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என சமீப ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மறதி நோய்க்கு தீர்வு காண்பதற்கு கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பேக்ரெஸ்ட் ரோட்மென் ஆராய்ச்சி மையம் அமெரிக்காவின் மிச்சிகன், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வு முடிவை ஆய்வுக்குழு தலை வர் மார்க்பெர்மென் கூறியதாவது:மனஉளைச்சல், மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோதெரபி சிகிச்சை மருந்துகளுடன் பூங்கா நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை தரும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: