தேங்காய் எண்ணெய்யில் நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் மற்றும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய்யை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. மழைக் காலத்தில்தேங்காய்எண்ணெய் கெட்டியாவதால், உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது எண்ணெய் கெட்டியாகி கொழுப்பாக உடலில் படிந்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் சாப்பிட்ட சத்துக்கள் உடலில் தங்காமல் மலத்துடன் வெளியேறுகின்றன. இதனையே மருத்துவர்கள் மால் அப்சார்ப்சன் என்கின் றனர். இதய நோயாளிகள், உடல்பருமன் பிரச்சனை உள்ளவர்கள், கணையத்தில் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளும் இந்த தேங்காய் எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது.

Leave A Reply