திருப்பூர், ஜூன் 5-திருப்பூர்,பகுதியை சார்ந்த பள்ளி மாணவர்கள் தெற்காசிய அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் மதிவாணன் பாராட்டி கௌரவித்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 26,27 தேதிகளில் அந்தமானில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான யோகாசன போட்டியில் திருப்பூரை சார்ந்த கலைமகள் பள்ளி மாணவர்கள் வீரமணி, ஈஸ்வர், வசந்தராஜ் ஜோசப் பள்ளி மாணவர்கள் நிவாஸ், விகாசினி,சுபாஸ் மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த சந்தியா, தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அவரவர் வயது பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். இவர்கள் யோகா பயிற்சியாளர் ரவி தலைமையில் திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பல்வேறு யோகாசனங்களை செய்தும் காண்பித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: