திருவாரூர், ஜூன் 5-10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவாரூர் மாவட் டத்தில் 75.76 சதவீத மாணவ- மாணவியர் தேர்ச்சி பெற் றுள்ளனர். இவர்களில் மாணவிகளே அதிக எண் ணிக்கையில் தேர்ச்சி பெற் றுள்ளனர். திருவாரூர் மாவட்டத் தில் தேர்வெழுதிய மாணவர் கள் 9ஆயிரத்து 739 பேரில் 7 ஆயிரத்து 171 பேரும் (73.63 சதவீதம்), 10ஆயிரத்து 663 மாணவிகளில் 8 ஆயிரத்து 286 பேருமாக (77.7 சத வீதம்) தேர்வெழுதிய 20 ஆயிரத்து 402 மாணவ – மாணவியரில் 15 ஆயிரத்து 457 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர்.மாவட்ட அளவில் முதல் இடத்தை பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.கிருஷ்ணகுமார் (489), திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி எஸ்.திவ்யா (489) ஆகிய இரண்டுபேர் பெற்றுள்ள னர். அதேபோல் 2ஆம் இடத்தை திருவாரூர் ஸ்ரீ ஜிஆர்எம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி எ.அட்சயா (488), திருத் துறைப்பூண்டி தூய அந் தோணியார் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அஜீத் (488) ஆகியோர் பெற்றுள் ளனர். 487 மதிப்பெண் பெற்று வலங்கைமான் ஸ்ரீமகாதேவ் குருஜி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.பார்க்கவி மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவ -மாணவியரை பள்ளி ஆசிரி யர்கள், கல்வித்துறை அலு வலர்கள் பாராட்டினர். சிறப்பிடங்களைப் பெற்ற அனைத்து மாணவ – மாண விகளையும் நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் சி.நட ராசன் வாழ்த்து தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: