திருவாரூர், ஜூன் 5-கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் திறக்கப் பட்டு மாணவ- மாணவியரின் சேர்க்கை நடைபெற்று வரு கிறது. ஆரம்பநிலை கல்வி முதல் உயர் கல்வி வரை பல் வேறு நிலை வரை கல்வி பயில கல்விநிலையங்களில் மாண வர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் அரசு நிர் ணயித்துள்ள கட்டணத்திற்கு மாறாக கூடுதலான தொகை யை வசூலித்து வருகின்றன. இதற்கு முறையான ரசீதுகளை வழங்குவதில்லை. இது பெற் றோர்கள் மத்தியில் பெரும் பதற் றத்தை ஏற்படுத்தி வருகிறது. நிலைமைகள் மோசமாவதற்கு முன்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலு வலர்கள் உடனடியாக தலை யிட்டு அரசு நிர்ணயித்த தொகை யை வசூலிப்பதற்கு தனியார் கல்வி நிலையங்களுக்கு அறி வுறுத்த வேண்டும். கூடுத லாக தொகை வசூலிக்கும் கல்வி நிலையங்கள் மீது சட் டப்படியான நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கொரடாச்சேரி ஒன்றி யம் திருக்கண்ணமங்கையில் திங்கட்கிழமை அன்று பி.கந்த சாமி தலைமையில் நடைபெற் றது. அக்கூட்டத்தில் இக்கோரிக் கையை முன்வைத்து தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.மேட்டூர் அணையில் போது மான தண்ணீர் இல்லாத சூழ லில், ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக் குமா என்ற நிலையில், விவ சாயிகள் கவலையில் ஆழ்ந் துள்ளனர்.எனவே மத்திய – மாநில அரசுகள் கர்நாடக அரசை வலியுறுத்தி தமிழகத்திற்கு குறிப்பாக காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர விரைவான நடவ டிக்கை மேற்கொள்ள வேண் டும்; தூர்வாரும் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண் டும்; அந்த பணியினை சிறப் பாக நிறைவேற்றுவதற்கு உரிய நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டும்; மேட்டூரில் தண் ணீர் திறந்து விடுவதற்கு முன் பாக இந்த பணிகளை முடிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்குவதற்கான துரித நட வடிக்கைகளை அரசுமேற் கொள்ள வேண்டும் என் றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீக்கதிர் நாளிதழ் 50ஆம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி ஓராண்டு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சி களுக்கு முத்தாய்ப்பாக முதல் நிகழ்ச்சியாக திருவாரூரில் ஜூன் 29ஆம் தேதியன்று பொன்விழா துவக்க நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: