திருச்சிராப்பள்ளி, ஜூன்5-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிகளின்படி திருச்சி வருவாய் மாவட்டத்தில் 91.14 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடந்தது. இதில் திருச்சி வருவாய் மாவட்டத்திலி ருந்து 39 ஆயிரத்து 867 மாணவர்கள் தேர்வு எழுதி னர். இதில் 36 ஆயிரத்து 334 மாணவர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர். அதன்படி வரு வாய் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 91.14 ஆகும்.திருச்சி வருவாய் மாவட் டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.14. கடந்த ஆண்டு 90.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற் றிருந்தனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.62 சத வீதம் அதிகரித்துள்ளது. திருச்சி வருவாய் மாவட்ட அளவில் காட்டூர் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி வித்யாலட் சுமி 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள் ளார். இவர் அறிவியல் மற் றும் சமூக அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட் ரிக்குலேசன் பள்ளி மாணவி சர்மிளா பிரியதர்சினி மற் றும் திருச்சி ஜேம்ஸ் மெட் ரிக்குலேசன் பள்ளி மாணவி தஸ்னிம் பானு ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள் ளனர். திருச்சி கிராப்பட்டி சான்டாமரியா பள்ளி மாணவி அனீஸ்டினா செபா டீனி, எஸ்ஆர்வி மெட்ரிக் பள்ளி அனிதா, டால்மியா புரம் விவேகானந்தா மெட் ரிக்குலேசன் பள்ளி மாண வர் பிரசன்னகுமார், துறை யூர் விமலா மெட்ரிக்குலே சன் பள்ளி மாணவி சிவரஞ் சினி, ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி வாணிஸ்ரீ, ஸ்ரீரங்கம் விக் னேஷ், ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளி மாணவி அழகம்மை ஆகிய 6 பேர் 492 மதிப் பெண்கள் பெற்று மூன்றாமி டம் பெற்றுள்ளனர்.

26 அரசுப் பள்ளிகள் 100 சதம்
திருச்சி வருவாய் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர் வில் 26 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. முசிறி, லால்குடி, திருச்சி ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 356 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 26 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. திருச்சி புத்தூர் கண்பார்வையற்றோர் பள்ளியில் தேர்வு எழுதிய 20 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. அதுபோல் வருவாய் மாவட்டத்தில் 9 பள்ளிகள் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளன. செம் பட்டு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் குறைந்த அளவு தேர்ச்சி சதவீதம் உள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய 37 மாணவர்களில் 12 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: