தஞ்சாவூர், ஜூன் 5-எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை 2010-மார்ச் மாதத்தில் எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்கள் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.தேர்வுத் திட்ட விதிமுறைகளின் படி மதிப்பெண் சான் றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருங்நது இரண் டாண்டுக்குப் பின்னர் அழிக்கப்பட்டு விடும். எனவே 2010- மார்ச் பருவத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் களைப் பெறாத தனித் தேர்வர்கள், தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள இதுவே இறுதி வாய்ப் பாகும். எனவே, வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு தேர்வு எழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வு எழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு ரூ.30 க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து “மண்டலத்துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவல கம் எண்: 1ஏ. அரபிக்கல்லூரி தெரு, காஜா நகர், திருச்சி-20” என்ற முகவரிக்கு 30.6.2012 தேதிக்குள் அனுப்பி மதிப் பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தக வலை மண்டலத் துணை இயக்குநர் சு.லட்சுமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.