ஊரக வளர்ச்சித்துறை மாநில மாநாடுவரவேற்புக்குழு நிறைவுக் கூட்டம்
திருப்பூர், ஜூன் 5-திருப்பூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வெள்ளி விழா ஆறாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மாநாட்டு வரவேற்புக் குழு நிறைவுக் கூட்டம் சனியன்று நடைபெற்றது.திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.ஞானசேகரன் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரமேஷ் தொடக்கவுரை ஆற்றினார். இதில் வரவேற்புக்குழு மேற்கொண்ட மாநாட்டு ஏற்பாடுகளையும், பணிகளையும் பாராட்டி மாநில துணைத் தலைவர்கள் பெ.கிருஷ்ணசாமி, கென்னடி பூபாலராயன், மாநிலச் செயலாளர்கள் இசட் ஞானக்கண் செல்லப்பா, விஜயபாஸ்கர் ஆகியோர் நன்றி தெரிவித்தும், பாராட்டியும் பேசினர்.மாநிலப் பொருளாளர் வி.நாகராஜன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சி.மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலப் பொதுச் செயலாளர் ந.சேகர் சிறப்புரை ஆற்றினார். மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். நிறைவாக வரவேற்புக்குழுச் செயலாளர் பி.செந்தில்குமார் நன்றி கூறினார்.

பிரச்சாரம் மற்றும் நிதியளிப்புப் பொதுக் கூட்டம்
சக்தி, ஜூன் 5-மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சாரம் மற்றும் நிதியளிப்புப் பொது கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.சத்தியமங்கலம் தாலுகா வடவள்ளியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சாரம் மற்றும் நிதியளிப்புப் பொதுக் கூட்டம் சி.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. வடவள்ளி செயலாளர் ஜெ.மைக்கேல்ராஜ், ஈரோடு மாவட்டச் செயலாளர் பி.மாரிமுத்து, தாலுகா செயலாளர் க.வெ.திருத்தணி, எம். விஜயகுமார், சி.சேகர், டி.சுப்பிரமணி, எம்.ரங்கசாமி, கே.ராஜன் உள்ளிட்டோர் பேசினர். மேலும் இக்கூட்டத்தில் கட்சி நிதியாக ரூ.20 ஆயிரம் முதல் தவணையாக வழங்கப்பட்டது. இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவிநாசி ஒன்றியத்தில் சிபிஎம் அரசியல் பிரச்சாரக் கூட்டம்
திருப்பூர், ஜூன் 5-திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளின் தாராளமயக் கொள்கைகளைக் கண்டித்து அரசியல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.ஞாயிறன்று ராக்கியாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு கே.காளிமுத்து தலைமை வகித்தார். யுவராஜ் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்எல்ஏ., ஒன்றியச் செயலாளர் பி.முத்துசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.தேவராஜன், ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.பாலசுப்பிரமணி மற்றும் ஆர்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக எஸ்.மூர்த்தி நன்றி கூறினார்.நடுவச்சேரிஅதேபோல் நடுவச்சேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கே.ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், ஒன்றியச் செயலாளர் பி.முத்துசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.சி.பழனிசாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.வேலுச்சாமி, ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். நிறைவாக சிவராமன் நன்றி கூறினார். கிராம மக்கள் திரளானோர் இதில் பங்கேற்றனர்.

குடிநீர் குழாய் மாற்றம்நகராட்சி அலுவலகம் முற்றுகை
மேட்டூர், ஜூன் 5-மேட்டூரில் குடிநீர் குழாய் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மேட்டூர் நகராட்சி 23- வது வார்டில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டிருந்த பொது குடிநீர் குழாய் மூலம் அப்பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய மேட்டூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் குழாயை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர். இதனால் பொதுமக்கள் மேட்டூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் அமைப்பப்பட்டிருந்த குடிநீர் குழாய் மூலம் குடிநீர் பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் வேறு இடத்திற்கு குடிநீர் குழாயை மாற்றியுள்ளது. நாங்கள் பலமுறை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடிநீர் குழாய் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்குழாய் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் குடிநீர் எடுத்து வர அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மேட்டூர் போலீசார் பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, அப்பகுதிமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: