கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க நடவடிக்கை :டிஜிபி ஜார்ஜ்
சென்னை, ஜூன் 5 – கல்லூரிகள் துவங்க உள்ள நிலையில், புதிதாக சேரும் மாணவர்களை, மூத்த மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்கும் வகை யில் பல நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத் துள்ளனர்.இது குறித்து தமிழக சட் டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் விழிப்புணர்வுடன் பணி யாற்றுமாறு தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், றறற.வnயீடிடiஉந.படிஎ.in என்ற காவல்துறையின் இணையதளம் வாயிலாக வும் மாணவ, மாணவிகள் ராகிங் குறித்த புகார்களை அளிக்கலாம். அதேபோல சயபபiபே உடிஅயீடயiவேள@பஅயடை.உடிஅ என்ற மின்னஞ்சல் முகவரி யும் ராகிங் குறித்து புகார் அளிக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து புகார்க ளைப் பெற இயக்குநரகங் கள், மாவட்ட எஸ்பிக்க ளுக்கு தனியாக செல்பேசி எண் வழங்கப்படும். மேலும், கல்லூரி, கல்வி நிறுவனங் களுக்கு நேரடியாக வந்து காவல்துறையினர் மாண வர்கள் மற்றும் பணியாளர் களுடன் கலந்துரையாட உள்ளனர்.கல்வி நிலையங்களில் ராகிங் குறித்து புகார்களைப் பெற புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரின் புகார் தடுப்பு செல்பேசி எண்க ளுக்கு குறுந்தகவலிலும் புகார்களை அனுப்பலாம். புகார் கொடுப்பவரின் விவ ரங்கள் ரகசியமாக வைக்கப் படும்.

ஜூன் 11 முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., விண்ணப்பங்கள்
சென்னை, ஜூன் 5-2012-2013-ஆம் கல்வி யாண்டிற்கு தொழில்நுட் பக் கல்வி இயக்ககம், சென்னை 600025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600006 கட்டுப் பாட்டில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், தனி யார் பொறியியற் கல்லூரி கள், கலைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முது நிலை பட்டப்படிப்பு சேர்க் கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங் கப்படும்.விண்ணப்பப் படிவங் களை நேரடியாக பெற விரும்புவோர் பிற இனத் தவர் ரூ.300க்கான கேட்பு வரைவோலையினை “The Secretary, Tamil Nadu MBA / MCA Admissions 2012, Government College of Technology, Coimbatore 641013” என்ற பெயரில் கோயம்புத்தூரில் காசாக்கும் வகையில் எடுத்து விண்ணப்பங்களை பெற் றுக் கொள்ளலாம்.தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் (அருந்ததியர்), பட்டியல், பழங்குடி இனத் தவர் ரூ.150 க்கான கேட்பு வரைவோலையினை சான் றிடப்பட்ட சாதிச் சான்றி தழின் நகலுடன் ஒப் படைத்து விண்ணப்பத் தினை விற்பனை மையங் களில் பெற்றுக் கொள்ள லாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை“The Secretary, Tamil Nadu MBA / MCA Admissions 2012, Government College of Technology, Coimbatore 641013” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண் ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.6.2012.எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முது நிலை பட்டப்படிப்பு சேர்க் கைக்கான கலந்தாய்வு ஜூலை 2012 இரண்டாவது வாரத்தில் “அரசினர் பொறி யியற் கல்லூரி, கோயம் புத்தூரில்” நடைபெறும். இதற்கான அறிவிப்பு தபால் மூலம் அனுப்பி வைக்கப் படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

நர்சிங் படிப்பு விண்ணப்பம்
சென்னை, ஜூன் 5-தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி. உள்ளிட்டவற்றில் சேர்வதற் கான விண்ணப்பங்கள் திங் களன்று முதல் வழங்கப் பட்டு வருகின்றன.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளான பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி.(செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் பட்டப் படிப்பு), பி.எஸ்.சி. (ரேடி யோடயக்னோசிஸ்) டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோதெரபி, பி.ஒ.டி. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் திங்களன்று முதல் விநி யோகிக்கப்பட்டு வருகின் றன.சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கன்னி யாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 17 அரசு மருத் துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் கிடைக் கின்றன.ஒரு விண்ணப்பப் படி வத்தின் விலை ரூ.350. விண் ணப்பம் பெற கடைசி நாள் ஜூன் 13ம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பத்தை வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப் பிக்க வேண்டும்.நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வ மாக உள்ளனர். விண்ணப்ப விநியோகம் துவங்கிய முதல் நாளே ஏராளமான மாண விகள் தங்கள் பெற்றோர் களுடன் வந்து விண்ணப் பங்களை வாங்கிச் சென் றனர்.

Leave A Reply

%d bloggers like this: