போலி வருமான வரி அதிகாரிகள் கைது :ரூ.33 லட்சம் பறிமுதல்
சென்னை: சென்னையில் வருமான வரி அதிகாரிகள் என்று கூறி சோதனையிட்டு பல லட்ச ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் வேலூரைச் சேர்ந்த முருகன் என்பவர் 2003ம் ஆண்டு இதேப்போன்ற வழக்கில் கைது செய்யப் பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.இவர்கள் வேலூர் மற்றும் தஞ்சா வூரைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணை யில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் ரொக்கப் பணமும், காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு: துளைகளை அடைக்க கேரளா எதிர்ப்பு
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையைப் பரிசோதிக்க நிபுணர் கள் அணையின் பல்வேறு இடங்களில் துளையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுகள் முடிந்த நிலையில், அத்துளைகளை அடைப்பதற்கு தமிழகத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் லாரிகளில் சென்றன.இந்நிலையில், சிமிண்ட் மூட்டை லாரிகள் வனப்பகுதியில் செல்வதற்கு கேரள வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத் தனர். மேலும், லாரிகள் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து சிமென்ட் மூட்டைகள் கொண்டு சென்ற லாரியைத் தடுத்து நிறுத் தினர். அவர்களுடன் தமிழக அரசு சார்பாக பொறியாளர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. இதனால் சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி திரும்பி வந்தது.

ஆதர்ஷ் முறைகேடு : முக்கிய ஆதாரங்கள் சமர்ப்பிப்பு
மும்பை: ஆதர்ஷ் குடியிருப்பில் முறை கேடாக வீடுகள் ஒதுக்கிய வழக்கை விசா ரித்து வரும் சிபிஐ, செவ்வாயன்று குற்றச் சாட்டுக்கான முக்கிய ஆதாரங்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் தது. இதன் மூலம், முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், முன்னாள் கேபினட் அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

போலி என்கவுன்ட்டர் வழக்கு: 11 காவலர்களுக்குசிறைத் தண்டனை
புது தில்லி: கடந்த 2009ம் ஆண்டு டேராடூ னில் எம்பிஏ மாணவன் ரன்பீர் சிங்கை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற வழக்கில் 18 உத்தரகாண்ட் காவல்துறை யினருக்கு சிறைத் தண்டனை வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து 18 காவலர்களில் 11 பேர் தாங்களாகவே சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட் டனர்.

ஆந்திர அமைச்சருக்கு சிபிஐ சம்மன்
ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொன்னல லட்சுமை யாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.விசாரணைக்காக ஜூன் 7-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் தற் போது 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக் கப்பட்டு வருகிறார். அவரின் காவல் ஜூன் 7-ம் தேதியுடன் முடிகிறது. அன்றைய தினம் விசாரணைக்காக ஆஜராகுமாறு லட்சுமை யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜகார்த்தாவில் நிலநடுக்கம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜகார்த் தாவில் திங்களன்று மாலை கடும் நிலநடுக்கம் ஏற் பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 5.9 ஆக பதிவானது. இதனால் உயர மான கட்டடங்கள் குலுங்கின. எனினும் நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ அல்லது வேறு பாதிப்புகளோ ஏற்பட வில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப் படவில்லை.

மேற்குவங்கம்: 6 நகராட்சி தேர்தல் முடிவுகள்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் 6 நகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. கிழக்கு மிட்னாப்பூர் மாவட் டத்தில் உள்ள கால்டியா நகராட்சியை இடது முன்னணி கைப்பற்றியது. இதே மாவட்டத்தில் உள்ள பன்ஸ்குரா, ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள துப்குரி, பிர்பும் மாவட்டத்தில் உள்ள நல்காட்டி, பர்துவான் மாவட்டத் தில் உள்ள துர்காபூர் ஆகிய 4 நகராட்சி களில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. நாடியா மாவட்டத்தில் உள்ள கூப்பர்ஸ் கேம்ப் நகராட்சியில் காங்கிரஸ் வென்றது.

Leave A Reply

%d bloggers like this: