திருச்சி கோளரங்கில் இன்று அரியவான் நிகழ்வு
திருச்சிராப்பள்ளி, ஜூன் 5-நூறு ஆண்டுகளுக்கு இருமுறை நடக்கும் அரிய வான் நிகழ்வான வெள்ளி கோளின் சூரிய கடப்பு இன்று (6ம் தேதி) புத னன்று காலை வானில் நடக்கிறது.இந்நிகழ்வினை பாது காப்பான முறையில் கண்டு களித்திட திருச்சி அண்ணா அறிவியல் மைய கோள ரங்க வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வான் தெளிவாக இருக்கும் நிலையில் இந்நிகழ்வினை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் காலை 6.30 மணி முதல் 10.20 மணி வரை இலவசமாக கண்டு களிக்கலாம். இத்தகவலை கோளரங்க திட்ட இயக்கு நர் (பொ) அழகிரிசாமி ராஜீ தெரிவித்தார்.

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர், ஜூன் 5-தஞ்சாவூரில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரி யம் மற்றும் பள்ளிக் கல் வித்துறையின் தேசிய பசு மைப்படை மற்றும் சுற் றுச் சூழல் மன்றங்களின் மாணவர்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நடைபெற் றது.மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சீ.சுரேஷ் குமார் தலைமை ஏற்று பேரணியைத் துவக்கி வைத்தார். மாசுகட்டுப் பாட்டு வாரியத்தின் பொறி யாளர் கோபாலகிருஷ் ணன் முன்னிலை வகித் தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் அ.காதர் சுல் தான் மற்றும்முதன்மை கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர்கள் ஜெ. புகழேந்தி, அ.சுப்பிரமணி யம், ஒருங்கிணைப்பாளர் பா. ராம் மனோகர் உள் ளிட்ட அலுவலர்கள் பங் கேற்றனர்.பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவி-மாண வியர்கள் பங்கேற்று சிறப் பித்தனர்.

ரூ.1.5 லட்சம்கட்சி நிதியளிப்பு
திருச்செந்தூர், ஜூன் 5-திருச்செந்தூரில் மார்க் சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி யின் நிதியளிப்பு மற்றும் அர சியல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சு. பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், ஆகி யோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் திருச்செந்தூர் ஒன்றியக்குழு சார்பில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.ஒன்றரை லட்சம் க.கன கராஜிடம் வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: