நைஜீரிய விபத்தில் இந்தியர் பலி
கொச்சி, ஜூன் 5-ஞாயிறன்று நைஜீரியா வில் நடந்த விமான விபத்தில் பலியான 153 பயணிகள் மற் றும் விமானிகளில் இரண்டு இந்தியர்களும் அடங்குவர். ஒருவர் விமானிகளில் ஒருவ ரான மகேந்திர சிங் ரத்தோர். மற்றொருவர் கேரளாவைச் சேர்ந்த கணினி பொறியாளர் ரிஜோ எல்டோஸ்.ரிஜோ எல்டோஸ் ஹுயூ லெட் அண்ட் பேக்கர்ட் நிறுவ னத்தில் பணியாற்றினார். லா கோஸில் நடைபெறும் மாநாட் டில் பங்கேற்பதற்காக அவர் அபுஜாவில் விமானம் ஏறினார். கடந்த நான்காண்டுகளாக நைஜீரியாவில் பணியாற்றிய ரிஜோ கேரளாவில் காவலங்காடு பஞ்சாயத்தைச் சேர்ந்த அவோ லிச்சலில் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி கொச்சுக்குடி எல்டோஸ் – எலிசபெத் தம்பதியின் ஒரே மகன் ஆவார்.ரிஜோவின் குடும்பத்தின ருக்கு சக ஊழியரின் பெற் றோர் மூலம் அவரின் மரணம் தெரிவிக்கப்பட்டது. அவரு டைய ஒரே சகோதரி அபுதாபி யில் உள்ளார்.

மும்பை பல்கலை. கேள்வித்தாள் கசிவு:6 பேர் கைது
மும்பை, ஜூன் 5-மும்பை பல்கலைக்கழகத் தில் இரண்டு பொறியியல் தேர் வுகளின் கேள்வித்தாள் வெளி யானது தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை அடையா ளம் காணும் நிலையில் மும் பை காவல்துறை உள்ளது. இந்த விசாரணையின் ஒரு அங்கமாக இரண்டு பல்க லைக்கழக ஊழியர்களும் மாணவர்களும் அடங்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த மாதத்தில் காவல் துறை குற்றப்பிரிவு இந்த வழக்கு தொடர்பாக 20 மாணவர்களை விசாரித்துள்ளது. போதுமான பாதுகாப்பின்மை காரணமாக கேள்வித்தாள்கள் வெளியாகி விட்டன என்று காவல்துறை கருதுகிறது. மே 26 அன்றும் மே 23 அன்றும் நடைபெறவி ருந்த இரண்டு தேர்வுகளுக் கும் சிலமணி நேரம் முன்பாக கேள்வித்தாள்கள் வெளியாகி விட்டன.

டிம்பிள் யாதவ்வேட்பு மனுதாக்கல்
புதுதில்லி, ஜூன் 5-உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கன்னோஜ் மக்களவை இடைத்தேர்த லில் போட்டியிட சமாஜ்வாதிக் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கன் னோஜ் தொகுதியில் காங்கி ரஸ் வேட்பாளரை நிறுத்தாது என்று அதன் பொதுச் செயலா ளர் திக்விஜய் சிங் செய்தியா ளர்களிடம் கூறினார்.2009 மக்களவை தேர்த லில் அகிலேஷ் யாதவ் போட் டியிட்ட கன்னோஜ் தொகுதியி லும், முலாயம் சிங் யாதவ் போட்டியிட்ட மைன்புரி தொகு தியிலும் காங்கிரஸ் வேட்பாளர் களை நிறுத்தவில்லை என்றும் திக்விஜய் சிங் சொன்னார்.ஆனால் 2009ல் பெரோசா பாத் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் டிம்பிள் போட்டியிட்டார். அவருக்கு எதிராக திரைப்பட நடிகர் ராஜ் பாபரை காங்கிரஸ் நிறுத்தியது. ராஜ்பாபர் அத்தேர்தலில் வெற் றிபெற்றார். சமாஜ்வாதிக் கட்சி யும் காங்கிரசும் அண்மைக் காலங்களில் கூடிக் குலாவு கின்றனர்.

பருவ மழை கேரளாவை எட்டியது
புதுதில்லி, ஜூன் 5-இந்திய பொருளாதாரத் தின் அடிநாதமான விவசாயத் தின் ஊற்றுக் கண்ணாகத் திக ழும் தென் மேற்கு பருவமழை கேரளாவை எட்டியது. இந்திய விவசாயிகள் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.பருவமழை கேரளாவை எட்டிவிட்டது என்று இந்திய வானிலைத்துறை அதிகாரி கூறினார். பொதுவாக பருவ மழை கேரளாவை ஜூன் 1ல் எட்டிவிடும். அப்படி எட்ட வில்லையென்றால் பீதிய டைய வேண்டியதில்லை என்றும் நான்கு நாள் முன்பின் இருக்கக்கூடும் என்றும் அறி வியலாளர்கள் கூறினர்.பருவக்காற்று வீச்சு வலுவாக உள்ளது. கேரளாவும் கர்நாடகாவின் தெற்குப் பகுதி யும் அடுத்த இரு தினங்களில் பெரும் மழைபெறக்கூடும் என்று தேசிய பருவநிலை மைய இயக்குநர் டி.சிவானந்த பால் பிடிஐயிடம் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: