கூடங்குளத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை: முதலமைச்சர்
சென்னை, ஜூன் 5-கூடங்குளத்தில் நிகழ்ந்த தாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.தில்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமானநிலையத்தில் செய்தி யாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பாரத் ரத்னா விருதுக்கு தகுதியான வர் தான் என்றும் ஜெயல லிதா கூறினார்.காங்கிரஸ் அல்லாத சில மாநில அரசுகள், மத்திய அர சுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என காங்கி ரஸ் தலைவர் சேனியா காந்தி யின் குற்றச்சாட்டுக்கு பதில ளித்த ஜெயலலிதா, இந்த குற்றச்சாட்டு பதில் அளிக்க தகுதியற்றது என்றார்.

பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: அமைச்சர் விஜய்
சென்னை, ஜூன் 5-“பயிற்சி மருத்துவர் களின் கோரிக்கைகள் பரி சீலிக்கப்பட்டு நிறைவேற் றப்படும்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கூறி யுள்ளார்.பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றி வரும் பயிற்சி மருத்து வர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.இந்த நிலையில் திருச்சி யில், அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களிடையே பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், புதுக் கோட்டை இடைத்தேர்தல் முடிந்த பிறகு, பயிற்சி மருத்து வர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறை வேற்றப்படும் என்றார்.அரசு மருத்துவமனை களில் சிசிடிவி கேமிரா பொறுத்தப்படும் என்றும், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பு மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை, ஜூன் 5-தமிழகத்தில் மதுக்கடை களை தனியார் நிறுவனங் கள் இயக்கி வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் இதற்கு தடை விதித்து அனைத்து மதுக்கடைகளையும்அரசே நடத்தும் என அறிவிப்பு வெளி யானது. அதுமுதல் டாஸ் மாக் என்கிற பெயரில் அரசே நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு ஏற்று நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் டிராபிக் ராமசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதி பதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் பெஞ்ச்முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது, இதே வழக்கை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய் ததை சுட்டிக்காட்டி, விசா ரணை நடத்தப்படும் அள வுக்கு இந்த வழக்கு தகுதி இல்லாதது என்று கூறி அம் மனுவை தள்ளுபடி செய் தனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர், ஜூன் 5-காவிரி நீர்ப்பிடிப்புபகுதி களில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வரு கிறது.செவ்வாயன்று (ஜூன் 5) நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1737 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது.11 மாவட்டங்களின் குடி நீர் தேவைக்காக அணை யில் இருந்து 1401 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர்அணையின்நீர்மட் டம் 79.43 அடியாகவும், அணையின் நீர் இருப்பு41.39 டி.எம்.சியாகவும்இருந்தது.

Leave A Reply

%d bloggers like this: