சென்னை, ஜூன் 5 –
சென்னை வியாசர்பாடியில் லாரஸ் எஜூடெக் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் தொழிற் பயிற்சி பள்ளியை துவக்கியுள்ளது.சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த பயிற்சி பள்ளி கல்வி அளித்து வேலை வாய்ப்பை அளிக் கிறது. குளிர்சாதன இயந்திர வல்லுநர், மின் மற்றும் மின் னணு துறை, கணினி வன்பொருள் கணக்கியல் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநில தொழிற் பயிற்சி கவுன்சிலுடன் இணைந்து செயல்பட உள்ளது. நகர்புறத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்காக இந்த பயிற்சி பள்ளி துவங்கப்பட்டுள்ளது என்று நிறுவ னத்தின் இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் கூறியுள்ளார். குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட தொழிலைப்பற்றிய ஆழ மான அறிவு, நடைமுறை பயிற்சிகளை குறைந்த கட்ட ணத்தில் லாரஸ் எஜூடெக் அளிக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது.
திருமுல்லைவாயல் கலைமகள் பள்ளி மாணவன் முதலிடம்
திருவள்ளூர், ஜூன் 5 –
திருவள்ளூர் மாவட்டத்தில் திருமுல்லைவாயல் கலைமகள் பள்ளி மாணவன் ஜஸ்டின் கவீர் 495 மதிப் பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். மாநில அளவில் 3ம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாவட் டத்தில் இந்த ஆண்டு 82.35 விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் (சமச்சீர் கல்வி கொண்டு வந்த முதலாம் ஆண்டில்) 24901 மாண வியர்களும், 26307 மாணவர்களும் என மொத்தம் 51208 பேர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 21586 மாணவிகளும், 20582 மாணவர்கள் உட்பட 42168 பேர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இம் மாவட்டத்தில் மாணவர்கள் 82.35 விழுக்காடு தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 5.84 விழுக்காடு கூடுதல் தேர்ச்சி. மாவட்டத்தில் 494 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் இரண் டாம் இடமும், மணவாளநகர் ஜேக்கப் பள்ளி மாணவி சர்மிளா 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றா வது இடம் பிடித்தார்.
முன்னேறிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சி
சென்னை, ஜூன் 5 –
டிஜிட்டல் டேரைக்ட் பிராட்காஸ்ட் (டிடிபி) தொழில்நுட்பத்தில் புதிய தொலைக்காட்சி தயாரிக்கப் பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்களை இதில் காண முடியும். உலகில் செமி கண்டக்டரில் முன் னணியில் உள்ள எஸ்டிமைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ், புது மையான மென்பொருளான இர்டிடோ, உலகில் பிரபல மான க்ளவுடு கம்ப்யூட்டிங் நிறுவனமான நிவியோ, ஆடியே வீடியோ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள பரூட்ஜா, இந்தியாவில் முன்னணியில் உள்ள டிடிஎச் சேவை நிறுவமான வீடியோகான், உலகில் மின் விளக்குகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி யில் முன்னணியில் உள்ள எழு நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளன. இந்த புதிய டிடிபி தொழில் நுட்பத்தின் விளம்பர தூதுவராக பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: