சென்னை, ஜூன் 5 –
சென்னையில் கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட் டது. இதனால் சென்னை வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். கொச்சியி லிருந்து 3 கப்பல்கள் மூலம் பெட்ரோல் சென்னைக்கு கொண்டு வந்த பிறகே நிலமை சீரானது.பெட்ரோலிய விலை உயர்வுக்குப் பின் ஏற்பட்ட தட்டுப்பாடு மக்களை கொந் தளிப்பில் ஆழ்த்தியது. நிலைமை சீராகி சில தினங்களே ஆன நிலையில் செவ்வாயன்று மீண்டும் பெட்ரோலிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஹெச்.பி. எனப்படும் ஹிந்துஸ்தான் நிறுவன பெட்ரோல் பங்கு களின் இருப்பு திங்களன்று மாலையே தீர்ந்து விட்டது. இதனால் இந்நிறுவன பெட் ரோல் பங்குகள் செவ்வா யன்று மூடப்பட்டு கிடந் தன. இதனால் சென்னை வாசிகள் பலரும் சிரமத் திற்கு ஆளானார்கள்.

Leave A Reply

%d bloggers like this: