இப்பிரச்சாரங்கள் நடை பெறும். தொழிலாளர்களின் பணியிடங்களிலும், குடி யிருப்புப் பகுதிகளிலும் இப் பிரச்சாரங்கள் நடத்தப்படும். 2012 பிப்ரவரி 28ல் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தினை பரிசீலனை செய்த பொதுக் குழு, கடந்த 3 ஆண்டுகளாக போராட்டங்களில் முன் வைக்கப்பட்ட எந்த கோரிக் கையினையும் மத்திய அரசு பரிசீலிக்கத் தவறியுள்ளதால், இதர மத்திய தொழிற் சங்கங் கள் மற்றும் தேசிய சம்மேள னங்களுடன் இணைந்து மத் திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான கூட்டுப் போராட் டத்தை தொடர்ந்து நடத்துவது எனத் தீர்மானித்தது.இதர மத்திய தொழிற் சங் கங்கள் மற்றும் தேசிய சம் மேளனங்களுடன் இணைந்து தேசம் தழுவிய பிரச்சாரம் மற் றும் போராட்டங்களின் இறு தியில் மத்திய தொழிற்சங்கங் களால் முடிவு செய்யப்படும் தேதிகளில் நாடு தழுவிய அள வில் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் வேலைநிறுத்தம் மேற் கொள்வது என்றும் முடிவு செய் யப்பட்டுள்ளது.
‘மதிப்பூதியம்’ என்ற பெய ரால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் சுரண் டப்படுவதை கண்டித்தும், அங்கன்வாடி, மதிய உணவு மற்றும் ஒருங்கிணைந்த சமூக சுகாதாரத் திட்டம் (ஹளுழஹ) உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்வதுடன், ஊதி யத்தை முறைப்படுத்திடவும் சமூகப் பாதுகாப்பு பலன்களை அளித்திட வலியுறுத்தியும், சிஐடியு நாடு தழுவிய அளவில் போராட்டங்களை மேற் கொள்ளும்.இதன் ஒரு பகுதியாக மாநி லம் தழுவிய அளவில் பிரச் சாரம் மற்றும் போராட் டங்கள் மேற்கொண்டு, அதன் இறுதியில் நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தின் முன்பு பெருந்திரளாகத் திரண்டு ‘மகாபாதவ்’ நிகழ்ச்சியினை நடத்துவது எனவும் தீர் மானிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச ஊதியமாக மாதத்திற்கு ரூ.10000 அளிப்பது, சமூகப் பாதுகாப்பு பயன்கள், நலவாரிய மற்றும் இதர சட்டப்பூர்வமான பயன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து அனைத்து பகுதி முறைசாரா தொழிலாளர்களையும் அணி திரட்டி இயக்கங்கள் மேற் கொள்ளப்படும். நவம்பர் 6ம் தேதியன்று கட்டுமானத் தொழிலாளர்கள் நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத் தினை மேற்கொள்வர். தனியார்மயத்திற்கு எதி ராகப் போராடி வரும், மத்திய பொதுத்துறை நிறுவன ஊழிய ர்களுக்கு ஆதரவாக சிஐடியு இயக்கங்களை மேற்கொள் ளும், விசாகப்பட்டினம் உருக் காலையின் பங்கு விற்பனைக்கு எதிராக அதன் தொழிலாளர் கள் ஒன்று பட்டு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடத்திடும் வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு தனது முழுமையான ஆதர வினை தெரிவிக்கிறது. பழிவாங்கும் போக்கை கை விடவும், தொழிற்சங்க உரிமை யினை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களின் செயல்பாட் டினை முறைப்படுத்திடவும் வலியுறுத்தி, தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல தரப்பு தொழிலா ளர்களுக்கும் சிஐடியு தனது ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் பல்வேறு பகுதி களில் அரங்கேறி வரும் சமூக மற்றும் பாலின ஒடுக்கு முறை களுக்கு எதிராக பிரச்சாரங் களையும் இயக்கங்களையும் மேற்கொள்ள சிஐடியு பொதுக் குழு முடிவெடுத்துள்ளது. சிஐடியுவின் 14-வது அகில இந்திய மாநாட்டை மார்ச் 2013ல் நடத்துவது எனவும் அதற்கு முன்னதாக மாநில மாநாடுகளை நடத்துவது என வும் பொதுக்குழு முடிவெடுத் துள்ளது. மார்ச் 2013க்கு முன்பாக சிஐடியுவின் உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில மற்றும் அகில இந்திய மாநாடுகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: