சென்னை, ஜூன் 5-இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களின் எழுச்சிமிகு போராட்டம் காரணமாக கொண்டுவரப் பட்ட சமச்சீர் கல்வித் திட் டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல புதிய சாதனைகளை நிகழ்த்தக் காரணமாகியுள்ளது. இது வரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து வந்த மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் உள் ளிட்ட நான்கு பாடத் திட்ட முறைகளையும் நீக்கி விட்டு, அனைவருக்கும் ஒரே மாதி ரியான கல்வித் திட்டத்தைத் தரும் வகையில் கொண்டு வரப்பட்டதே சமச்சீர் கல்வித் திட்டம்.இதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம் பின. குறிப்பாக தனியார் பள்ளிகள் முரண்டு பிடித் தன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத் தையே தூக்கி குப்பையில் போட்டது. ஆனால் சென் னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அரசின் முடிவை ரத்து செய்து, சமச் சீர் கல்வித் திட்டத்தை அமல் படுத்த உத்தரவிட்டன.இதையடுத்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கடந்த ஆண்டு சமச்சீர் கல் வித் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் நடந்த முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட் டுள்ளன. தேர்வில் முதலிடத் தைப் பிடித்த தஞ்சை மாண வர் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப் பெண் பெற்றுள்ளார். இது சாதனையாகும்.
இதுவரை யாரும் இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்றதில்லை.அதேபோல நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற் றும் சாதித்துள்ளார் ஸ்ரீநாத். இதுவும் இதுவரை யாரும் செய்திராத சாதனையாகும்.சமச்சீர் கல்வித் திட்ட பாடங்கள் மிகவும் இலகு வாகவும், சிறப்பாகவும் இருப்பதாக அது முதலில் அமல்படுத்தப்பட்டபோதே பாராட்டுக்களை வாங்கிக் குவித்தது. தற்போது அதற்கு மணிமகுடம் சூட்டப்பட் டது போல மாறியுள்ளது பத்தாம் வகுபபுத் தேர்வில் நிகழ்த்தப்பட்டுள்ள புதிய சாதனைகள்.

Leave A Reply