புதுச்சேரி, ஜூன் 5-
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் ஜூன் 8ல் ஆஜராக வேண்டும் என நீதி பதி உத்தரவு.காஞ்சி வரதராஜர் பெரு மாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரனை புதுச் சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணை செவ்வாய்கிழமை (ஜூன்-5) மாவட்ட தலைமை நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்றது.வழக்கில் குற் றஞ்சாட்டப்பட்ட 24பேர் களில் ரகு,சுந்தரேச அய்யர் உள்பட 12 பேர்மட்டும் ஆஜரானர்கள். இவ்வழக்கு விசாணையை வரும் ஜூன் 8 ஆம்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினம் மனுதாரர் பத்மா,அவரது வழக்கறிஞர் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.