தஞ்சாவூர், ஜூன் 5-தஞ்சையில் காதல் திரு மணம் செய்ததால் தலித் இளைஞர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். ஆதிக்கசமூகத்தினரின்வெறிச் செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண் டனத்தை தெரிவித்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம், சூரக் கோட்டை ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பழனிவேலு – ஆதி லெட்சுமி என்ற தலித் சமூகத்தைசேர்ந்தோரின் மகன் மாரிமுத்து (25) பி.எஸ்சி., சூரக்கோட்டை மேலத் தெரு ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பழனிமேகம் – கிரிஜா ஆகியோரின் மகள் அபிராமி (23) டி.டீ.எட்., ஆகிய இருவரும் காதலித் துள்ளனர். அபிராமியின் பெற்றோர் எதிர்த்ததால், இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு சென்றுவிட் டனர். இவர்களுக்கு பெண் குழந்தை (சவுந்தர்யா- 1)பிறந் தவுடன் தஞ்சைக்கு வந்து குடியிருந்து வந்துள்ளனர். அபிராமியின் சகோதரர் அருண்குமார், அபிராமி மற் றும் அவர் கணவர் மாரிமுத்து விடம் போனிலும், நேரி லும் பார்த்துப்பேசி ஆதர வாக இருந்துள்ளார். இத னால் பெண் வீட்டில் எதிர்ப் பிருக்காது என்று எண்ணி, மாரிமுத்துவின் சொந்த ஊரான எம்ஜிஆர் நகருக்கே குடிவந்துள்ளனர்.
இந்நிலையில் தனது மகள் பிறந்தநாளை கொண் டாட மாரிமுத்து தஞ் சைக்கு சாமான்கள் வாங்க 25-05-2012 அன்று சென்றுள் ளார். அப்போது, குழந்தை சவுந்தர்யாவுக்கு செயின் வாங்கி வைத்துள்ளேன்; வாங்கிக்கொண்டு போ என்று அவரது மைத்துனர் அருண் குமார் கூறினார். மாரிமுத்து தனது வீட்டிற்கு மேற் கண்ட செய்தியை சொல்லி விட்டு, மைத்துனரை பார்த்து வருகிறேன் என்று சொல்லிச் சென்றவர் திரும்ப வீட் டிற்கு வரவில்லை.இரவு வரை வீட்டுக்கு வரவில்லை என்றவுடன் மாரிமுத்து குடும்பத்தினர் தேடிப்பார்த்துள்ளனர். எங் கும் காணவில்லை. மறுநாள் காலையில் சூரக்கோட்டை அருகே மாரிமுத்து பிணம் கிடப்பதை சொல்லியுள்ள னர். அவரது மனைவி அபி ராமி, பெற்றோர் போய் பார்த்தபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மாரிமுத்துவின் குரல் வளையை முழுவதும் அறுத்து, இடது கையை வெட்டி எடுத்துச் சென்றுள் ளனர். ஆண்குறியை அறுத்து எறிந்துள்ளனர். இதுதொடர்பாக தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் மாரிமுத்துவின் குடும்பத் தினர் புகார் கொடுத்துள்ள னர். காதல் திருமணம் செய்த காரணத்தினாலேயே தலித் சமூகத்தைச் சேர்ந்த மாரி முத்துவை மிகவும் திட்ட மிட்டு உறவாடி, நடித்து ஆதிக்க சமூகத்தினர் கொடூர மாகக் கொலை செய்துள்ள னர். இன்றும் நாகரிகம், பண் பாடு, கல்வியறிவு வளர்ந்த காலத்திலும் காதல் திரும ணம் செய்ததால், சாதிய வெறித்தனத்துடன் நடத்தப் படும் கொடூரக் கொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டக்குழு வன்மையா கக் கண்டிக்கிறது.தஞ்சை தாலுகா காவல் துறையினர் கொலைகார குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண் டும். பாதிக்கப்பட்ட மாரி முத்துவின் குடும்பத்தின ருக்கு நிவாரண உதவியும் வழங்கிட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் தஞ்சை மாவட் டக்குழு சார்பில் மாவட்ட அமைப்பாளர் சின்னை. பாண்டியன் அறிக்கை விடுத் துள்ளார்.
ஆறுதல்
கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் குடும்பத்தி னரை சந்தித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் தஞ்சைமாவட்ட அமைப்பாளர் சின்னை. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாலதி, பி. செந்தில்குமார், மாவட் டக்குழு உறுப்பினர் என். சிவகுரு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட் டப்பொருளாளர் ஆர். மணி மாறன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.