கரூர், ஜூன் 5- கரூர் நகராட்சி முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச் சனையில் கரூர் நகராட்சி நிர்வாகம்அலட்சியம் காட்டுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட் டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப்பகுதிகளிலும் குடி நீர் விநியோகம் 20 நாட்களுக்கு ஒருமுறைத்தான் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமத்திற்கு ஆளா கின்றனர். மேலும் குடிநீரை பல நாட்களுக்கு சேமித்து வைத்து குடிப்பதால், குடிநீரில் புளு உருவாகி குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங் குவதற்கு கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், வெறும் குடிநீர் திட்டங்களை மட்டும் அறிவித்து பொதுமக்களை ஏமாற்றும் வேலையை செய்துவருகிறது. இதை வாலிபர் சங்கம் கண்டிப்பதோடு உடனடியாக கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான முறையில் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கி நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும், கரூர் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்துநிறுத்திட வேண்டும்; அரசு அறிவித்த கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்திட வேண்டும் என்றும், இப்பிரச்சனைகளில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மக்களை திரட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப் படும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.