மன்னார்குடி, ஜூன் 5-ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரி 1983-84ம் கல்வி ஆண்டில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய மூன்று பட்டயப் பிரிவுகளில் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது.1987-88ம் கல்வி ஆண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவும், 2001 – 02ம் கல்வி ஆண்டு முதல் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவும் தொடங்கப்பட்டு, 2005-06ம் கல்வி ஆண்டில் (இரண்டாவது வகுப்பு) எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் மேலும் 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ள அனுமதி பெறப்பட்டது.இந்த கல்வி ஆண்டு (2012 – 13) முதல் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் கூடுதலாக தலா 60 பேர் சேர்க்க அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வி ஆண்டு முதல் ஷிப்ட் முறையில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் – எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் தலா 60 பேர் சேர்த்துக் கொள்ளவும் அனுமதி பெறப்பட்டுள்ளது.தற்போது சுமார் 1400 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 63 ஆசிரியர்கள், 47 ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.கனடா – இந்தியா கூட்டு பயிலக திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சான்றிதழுடன் சிறப்புப் பயிற்சி வகுப்புகள், ஆட்டோ கேட், புரோ – இ, மல்டிமீடியா, செல்போன் சர்வீஸ், அழகுக் கலைப் பயிற்சி, தையல் பயிற்சி ஆகியவை நடத்தப்படுகின்றன. இதில் பொதுமக்களும் சேர்ந்து பயன் பெறுகின்றனர்.நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரோட்டராக்ட் கிளப் போன்ற சேவைச் சங்கங்கள் மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்க்கும் விதமாக செயல்பட்டு வருகின்றன.இந்த கல்வி ஆண்டில் இறுதியாண்டு மாணவர்கள் 256 பேர் எச்சிஎல், சிம்சன் ஆகிய முன்னணி நிறுவனங்களிடமிருந்து வேலைக்காக தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.மேற்கண்ட தகவலை கல்லூரியின் முதல்வர் அ.வளவன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: